2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

ஐ.பி.எல்: ஹர்ஷால், ஆவேஷ் தக்க வைக்கப்படவில்லை

Shanmugan Murugavel   / 2021 டிசெம்பர் 01 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) அடுத்தாண்டு ஏலத்துக்கு முன்னதாக ஹர்ஷால் பட்டேல், ஆவேஷ் கான், ஷுப்மன் கில், இரவிச்சந்திரன் அஷ்வின், லோகேஷ் ராகுல், ரஷீட் கான், ஜொஃப்ரா ஆர்ச்சர், இஷன் கிஷன், ஷீகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ஜொனி பெயார்ஸ்டோ, ககிஸோ றபாடா உள்ளிட்டோர் அவர்களின் அணிகளால் தக்க வைக்கப்படவில்லை.

இதேவேளை, மொஹமட் சிராஜ், உம்ரான் மலிக், அப்துல் சமட், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி, பிறித்திவி ஷா, ருத்துராஜ் கைகவாட், அன்ட்ரே ரஸல், சுனில் நரைன் உள்ளிட்டோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஒவ்வொரு அணியாலும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பின்வருமாறு, அடைப்புக்குறிக்குள் அவர்களின் ஊதியங்களின் ஒரு கோடி இந்திய ரூபாயின் மடங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ்: இரவீந்திர ஜடேஜா (16), மகேந்திர சிங் டோணி (12), மொயின் அலி (8), ருத்துராஜ் கைகவாட் (6)

டெல்லி கப்பிட்டல்ஸ்: றிஷப் பண்ட் (16), அக்ஸர் பட்டேல் (9), பிறித்திவி ஷா (7.5), அன்றிச் நொர்ட்ஜே (6.5)

கொல்கத்தா நைட் றைடர்ஸ்: அன்ட்ரே ரஸல் (12), வெங்கடேஷ் ஐயர் (8), வருண் சக்கரவர்த்தி (8), சுனில் நரைன் (6)

மும்பை இந்தியன்ஸ்: றோஹித் ஷர்மா (16), ஜஸ்பிரிட் பும்ரா (12), சூரியகுமார் யாதவ் (8), கெரான் பொலார்ட் (6)

பஞ்சாப் கிங்ஸ்: மாயங்க் அகர்வால் (12), அர்ஷ்டீப் சிங்க் (4)

ராஜஸ்தான் றோயல்ஸ்: சஞ்சு சாம்ஸன் (14), ஜொஸ் பட்லர் (10), யஷஸ்வி ஜைஸ்வால் (4)

றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி (15), கிளென் மக்ஸ்வெல் (11), மொஹமட் சிராஜ் (7)

சண்றைசர்ஸ் ஹைதரபாத்: கேன் வில்லியம்ஸன் (14), உம்ரான் மலிக்  (4), அப்துல் சமட் (4)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .