2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

மெஸ்ஸிக்கெதிரான வரிக் குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டன

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 07 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்ஜென்டீனா தேசிய அணியும் வீரரும், ஸ்பெயின் கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் நட்சத்திர வீரருமான லயனல் மெஸ்ஸிக்கு எதிரான வரிக் குற்றச்சாட்டுக்களை ஸ்பெயின் அரச வழக்கறிஞர்கள் கைவிட்டுள்ளனர்.

எனினும் மெஸ்ஸியின் தந்தையான ஜோர்ஜ் மெஸ்ஸிக்கெதிரான வழக்கை அவர்கள் தொடரத் தீர்மானித்துள்ளனர். இவரது குற்றம் நிரூபிக்கப்படுமிடத்து, இவர் 18 மாத சிறைத்தண்டனையை எதிர்நோக்கவுள்ளதோடு, 2 மில்லியன் யூரோவை செலுத்தவேண்டியும் உள்ளார்.

ஸ்பானிய அதிகாரிகளிடம் 4 மில்லியன் யூரோவுக்கு மேற்பட்ட பணத்தை மோசடி செய்ததாக மெஸ்ஸியும், அவரது தந்தையும் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.

2007ஆம் ஆண்டுக்கும் 2009க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தனது மகன் பெற்ற வருமானத்துக்கான வரியை பெலிஸே மற்றும் உருகுவேயில் உள்ள இரு நிறுவனங்களை பயன்படுத்தி தடுத்ததாகவே ஜோர்ஜ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தனது ஒப்பந்தத்தினை வாசிப்பதுக்கோ, கற்பதற்கோ, ஆராயவோ ஒரு நிமிடத்தைக் கூட மெஸ்ஸி செலவழிக்கவில்லை அவரது வழக்கறிஞர்கள் வாதாடியிருந்தனர். மெஸ்ஸியினுடைய தந்தையால் நிர்வகிக்கப்படும் அவரது நிதிகளுக்கு, என்ன நடந்தது என்று தெரியாமல் கூறி மெஸ்ஸி தப்பிக்க முடியாது என பார்சிலோனாவில் உள்ள உயர் நீதிமன்றமொன்று கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்திருந்தது. எனினும் தற்போது மெஸ்ஸி குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

செலுத்தப்படாத வட்டி மற்றும் அதற்கான வட்டி என 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மெஸ்ஸி மற்றும் அவரது தந்தையால் சரிசெய்யப்படும் கட்டணம் என 5 மில்லியன் யூரோ செலுத்தப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .