2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

தூதுக்குழுக்கள்…

Editorial   / 2021 செப்டெம்பர் 30 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பயணிகளுக்காக இலங்கை சுற்றுலாவை மீண்டும் தொடங்கிய பின்னர், இந்தியப் பயண முகவர் சங்கம் மற்றும் இந்தியப் பயண முகவர் கூட்டமைப்பிலிருந்து இரண்டு வெளிச்செல்லும் சுற்றுலா செயற்பாட்டுத் தூதுக்குழுக்களை சென்னையில் உள்ள இலங்கையின் துணை உயர் ஸ்தானிகராலயம் நடாத்தியது.

இந்தத் தூதுக்குழுக்கள் முறையே 2021 செப்டம்பர் 23 மற்றும் 24ஆந் திகதிகளில் இலங்கையின் துணை உயர் ஸ்தானிகராலயத்தில் நடாத்தப்பட்டன என இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றுநோய்க் கட்டுப்பாடுகளின் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இலங்கையை மீண்டும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான பயண இடமாக ஊக்குவிப்பதும், இலங்கை சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்பதுமே இந்த சந்திப்பின் நோக்கங்களாக இருந்தன என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .