2023 ஜூன் 07, புதன்கிழமை

பாதுகாப்பு உரையாடல்...

Editorial   / 2022 நவம்பர் 21 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022 நவம்பர் 16-17 வரை கராச்சி எக்ஸ்போ நிலையத்தில் மூன்றாவது சுற்று பாகிஸ்தான்-இலங்கை ஆயுதப் படைகளின் பாதுகாப்பு உரையாடல் நடைபெற்றது.

பாகிஸ்தான் தூதுக்குழுவிற்கு பாதுகாப்பு செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு நிலை) ஹமூத் உஸ் ஜமான் கான் தலைமை தாங்கியதோடு இலங்கை தூதுக்குழுவிற்கு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு நிலை) கமல் குணரத்ன தலைமை தாங்கினார்.

இதன் போது, பாகிஸ்தானும் இலங்கையும் இருதரப்பு இராணுவ உறவுகளின் தற்போதைய நோக்கத்தை மதிப்பாய்வு செய்ததோடு ஆயுதப்படை பாதுகாப்பு உரையாடலின் கீழ் அடையப்பட்ட முன்னேற்றம் குறித்தும்  திருப்தியை வெளிப்படுத்தின. பிராந்திய பாதுகாப்பு மற்றும் முன்னோக்கியிருக்கும் சவால்கள் குறித்து இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். அனைத்து பிராந்திய மற்றும் சர்வதேச அரங்குகளிலும் பாகிஸ்தானும் இலங்கையும் பரஸ்பரம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, இராணுவப் பயிற்சி, கூட்டுப் பயிற்சிகள், உயர்மட்ட வருகைகள் தொடரும் எனவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இறுதியில், 2023ஆம் ஆண்டு ஆயுதப்படைகளின் பாதுகாப்பு உரையாடலின் அடுத்த கூட்டம் இலங்கையில் நடாத்தப்பட  ஒப்புக்கொள்ளப்பட்டது. பிரதிநிதிகள் குழு கராச்சியில் நடைபெற்று வரும் டிஃபென்ஸ் எக்ஸ்போ ஐடியாஸ்-22  கண்காட்சியை பார்வையிட்டதோடு பல்வேறு பங்குதாரர்களுடனும்  கலந்துரையாடியது.  உயர்மட்ட பாதுகாப்பு தூதுக்குழு, பாதுகாப்பு உற்பத்தி அமைச்சர், பாதுகாப்பு உற்பத்தி செயலாளர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் கூட்டுப் பணியாளர்கள் குழுவின் தலைவர் ஆகியோரையும் சந்தித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .