Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 நவம்பர் 24 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் பாரூக் பர்கி புத்தளத்தில் அமைந்துள்ள இரண்டு பாடசாலைகளுக்கு கணினிகளை அன்பளிப்பு செய்ததோடு , அப்பிரதேசத்தின் தகுதியான பெண்களுக்கு தையல் இயந்திரங்களையும் வழங்கி வைத்ததன் பிறகு வட மாகாணத்திற்கான தனது முதல் விஜயத்தை ஆரம்பித்தார்.
இந்த அன்பளிப்பானது நட்பு அண்டை நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பாகிஸ்தானின் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
பாகிஸ்தானும் இலங்கையும் முறையே 1947 மற்றும் 1948 இல் சுதந்திரம் பெற்றதில் இருந்து நீண்ட காலமாக கலாசார இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு வரலாற்றைப் பகிர்ந்து கொள்ளும் இரு நாடுகளாகும்.
வணக்கத்திற்குரிய அட்டமஸ்தானாதிபதி மிரிசவெட்டிய ஸ்தூபி பிரதம தேரர் எத்தலேவடுனவேவே ஞானதிலக தேரர், ஸ்ரீ மஹா போதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரர், அநுராதபுர அபயகிரிய விகாரை பிரதம தேரர் கல்லஞ்சியே ரத்தனசிறி தேரர் ஆகியரை சந்தித்ததோடு பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இந்த முக்கியத்துவம் மற்றும் நீண்டகால உறவை உயர்ஸ்தானிகர் விளக்கபடுத்தினார்.
அநுராதபுரத்தின் வணக்கத்துக்குரிய பிரதம பிக்குகள் மற்றும் ரஜமஹா விகாரை மிஹிந்தலை பிரதம தேரர் கலாநிதி தம்மரதன தேரர் ஆகியோர் உயர்ஸ்தானிகரை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைந்ததுடன், எப்போதும் இலங்கைக்கு உதவும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் அனைத்து முயற்சிகளையும் பாராட்டினர்.
உயர்ஸ்தானிகர் மற்றும் அனுராதபுர ,மின்ஹித்தலையின் வணக்கத்திற்குரிய பிரதம தேரர்களுக்கு இடையில் கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்றத்தின் மூலம் இலங்கை இளைஞர்கள் மற்றும் மக்களின் நலனுக்கான ஒத்துழைப்புத் திட்டங்களை மையமாகக் கொண்ட பரஸ்பர இருதரப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
29 minute ago
40 minute ago