2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

Editorial   / 2022 ஒக்டோபர் 30 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


 
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு தேராவில்  மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய சிரமதான பணிகள் இன்று (30) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

2022 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள், எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி இடம்பெற உள்ள நிலையில் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணி குழுவினரால் துயிலும் இல்ல வளாகம் சிரமதானம் செய்கின்ற வேலைகள்   ஆரம்பிக்கப்பட்டன

 தேராவில் துயிலும் இல்ல வளாகத்தில் காலை 9.30 மணியளவில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் மக்கள் சிரமதான பணியில் ஈடுபட்டுள்ளனர்

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு மற்றும் மாவீரர்களுடைய பெற்றோர் நலம் விரும்பிகள் சமூக செயற்பாட்டாளர்கள் சிவில் சமூக அமைப்பு பிரதிநிதிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இணைந்து கொண்டு இந்த சிரமதான பணியை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. ( சண்முகம் தவசீலன் )


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .