2025 நவம்பர் 15, சனிக்கிழமை

புலமை பரிசில் பரீட்சை…

Editorial   / 2022 டிசெம்பர் 18 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் நாடளாவிய ரீதியிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் இன்று (18) காலை 9.30க்கு ஆரம்பமானது. ஒரு மணிநேரத்துக்கு முன்னதாகவே பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபங்களை வந்தடைந்தனர்.

 

புத்தளத்தில்...

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை மண்டபத்தில் புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் ஐந்தாம் தர மாணவர்கள் பரீட்சை எழுத தயாராகவுள்ளதை படத்தில் காணலாம்.   எம்.யூ.எம்.சனூன்

முல்லைத்தீவில்…   

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் முல்லைத்தீவில் 2144 மாணவர்கள் தோற்றுகின்றனர். தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் இடம்பெறுகிறது 

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சையில் கலந்து கொள்வதை அவதானிக்க முடிகின்றது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் காலை ஆலயங்களில் சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் பரீட்சையில் கலந்து கொண்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்தில் 09 பரீட்சை நிலையங்களில் 606 மாணவர்களும் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 18 பரீட்சை நிலையங்களில் 1538 மாணவர்களுமாக பாடசாலைகளில் இருந்து 2144 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் இவர்களுக்காக 27 பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளதாகவும் கல்விப் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன சண்முகம் தவசீலன்

சம்மாந்துறையில்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று(18) அம்பாறை மாவட்டத்தில் கடும் மழைக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.

இன்று காலை ஆரம்பமான குறித்த பரீட்சைக்கு கல்முனை கல்வி வலயம், சம்மாந்துறை கல்வி வலயத்தை சேர்ந்த மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சைக்கு சமூகமளித்திருந்தனர்.

மேலும் பரீட்சை இடம்பெற்ற நிலையங்களில் ஆயுதம் தாங்கிய பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் இம்முறை  3,34,698 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இம்முறை பரீட்சைகளில் இரண்டாவது வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தர்மசேன குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிணங்க மாணவர்களின் உளநலத்தை கருத்திற்கொண்டு  காலை 9.30 முதல் முற்பகல் 10.45 வரையான காலப்பகுதியில் இரண்டாம் பகுதி வினாப்பத்திரமே மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (சிஹான் பாருக்)

இரத்தினபுரியில்…

புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்கள் இன்றையதினம் (18) காலை தமது பெற்றோர்களுடன் காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலயத்திற்கு வருகை தந்த போது எடுக்கப்பட்ட படம்.  (சிவாணி ஸ்ரீ)

 மலையகத்தில்…

இலங்கை பூராகவும் தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சையானது ஞாயிற்றுக்கிழமை (18) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. இரண்டாயிரத்து 894 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு இந்த வருடம் மூன்று இலட்சத்து 34 ஆயிரத்து 698 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

புலமை பரிசில் பரீட்சைக்கான இரண்டாவது வினாத்தாளுக்கான பரீட்சை காலை 9.30 இலிருந்து 10.45 வரைக்குமான 1 மணி நேரம் 15 நிமிடங்களை கொண்டிருக்கும். முதலாவது வினாத்தாள் முற்பகல் 11.15 மணிமுதல் நண்பகல் 12.15 மணி வரைக்குமான 1 மணி நேரம் நிமிடங்களை கொண்டிருக்கும்.

அந்தவகையில் மலையகத்திலும் 18.12.2022 அன்று மலையக மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது.

அந்தவகையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம், அட்டன் ஹைலன்ஸ் கல்லூரி ஆகிய பாடசாலைக்கு அப்பகுதி மாணவா்கள் ஆா்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது. அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. எஸ்.கணேசன்,செ.தி.பெருமாள்.

யாழ்ப்பாணத்தில்…

ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று இடம்பெறுகிற நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் காலை வேளையில் மிகுந்த உற்சாகத்துடன் பரீட்சை மண்டபத்துக்கு சென்றிருந்தார்கள் தமது பிள்ளைகளை பெற்றோர்கள்  பரீட்சை நிலையத்திற்கு  உற்சாகமளித்து அனுப்பி வைத்ததையும் காணக் கூடியதாக இருந்தது. நிதர்ஷன் வினோத்

வத்தேகமவில்…

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நாடெங்கிலும் நடைபெறுகிறது நேர காலத்தோடு மாணவர்களை பரீட்சை மண்டபங்களுக்கு அழைத்துச் செல்வதில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அதிக ஆர்வம் செலுத்தியதோடு ஆரம்பக் கல்வியின் ஐந்தாண்டுகள் ஆர்வத்தோடு கற்ற மாணவர்களும் மிகுந்த ஆர்வத்தோடு பரீட்சைக்கு முகம் கொடுப்பதை அவதானிக்க முடிந்தது மெய்யன்

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X