Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மார்ச் 07 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
படுகொலை செய்யப்பட்ட யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கிட்ணன் சிவநேசன் அவர்களுடைய 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று திங்கட்கிழமை (06) மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் வவுணதீவு நாவல்தோட்டம் மாரியம்மன் ஆலயத்தின் முன்னால் இடம்பெற்றது.
இதில் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் போது மாமனிதர் கிட்ணன் சிவநேசனின் திருவுருவ படத்திற்கு மாவீரர் கங்காவின் தாயாரான தம்பி போடியார் அமராவதி ஈகைச்சுடர் ஏற்றியதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் மலர் மாலை அணிவித்ததுடன் கலந்துகொண்டவர்கள் அன்னாரது ஆத்மசாந்தி வேண்டி மலர் தூவி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர். கனகராசா சரவணன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .