2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

புத்தளத்தில் மூன்று மீனவர்கள் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் களப்பு பகுதியில், தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட  மூவர், நேற்று  (22) கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி சோத்துபிட்டி வாடிய பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடற்தொழில் திணைக்களத்தின் புத்தளம் மாவட்ட அலுவலக அதிகாரிகளுடன் இணைந்து, கற்பிட்டி விஜய கடற்படையினர் மற்றும் கடற்படையின் இரகசியப்பிரிவின் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே, சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான,  தடைசெய்யப்பட்ட ஒருதொகுதி மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .