2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

புத்தளத்தில் விசேட நடமாடும் சேவை

Editorial   / 2020 செப்டெம்பர் 17 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸீன் ரஸ்மின்

புத்தளத்தில் கிராமிய குடிநீர்த்திட்டங்கள் தொடர்பான விசேட நடமாடும் சேவையொன்று, நாளை (18)  பாலாவி எருக்கலம்பிட்டி (நாகவில்லு) White  வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.   

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின், புத்தளம் தொகுதி அமைப்பாளர் ஏ.எச்.எம்.ரியாஸ்,  இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேராவிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க,  குறித்த நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தளம் தேர்தல் தொகுதியிலுள்ள புத்தளம், கற்பிட்டி, முந்தல் மற்றும் வன்னாத்தவல்லு ஆகிய நான்கு பிரதேச செயலகங்களுக்குட்பட்ட கிராமங்களில் நிலவிவரும், குடிநீர் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், குறித்த நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்த நடமாடும் சேவையில் கலந்துகொள்ளவுள்ளனமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .