2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

போதைப்பொருள் உருண்​டை விற்றவருக்கு விளக்கமறியல்

Editorial   / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஞ்சா கலந்த 1,002 போதை உருண்டைகளை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பிளஸ்ஸ நீதவான் நீதிமன்ற நீதவான், உத்தரவிட்டுள்ளார்.

இந்நபரை, மாவத்தகம பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நபர், பாடசாலை மாணவர்கள், இளைஞர்களை இலக்கு வைத்து, இந்த உருண்டைகளை, மாவத்தகம நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் ​மறைத்து வைத்து விற்பனை செய்து வந்துள்ளார் என்றும் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, இந்நபர் கைது செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தெலியாகொன்ன பிரதேசத்தில் வசித்துவரும் பொலன்னறுவையைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .