2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

சிலாபத்தில் 4 கிராம பிரிவுகள் முடக்கம்

R.Maheshwary   / 2020 நவம்பர் 26 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம்- வெல்ல பிரதேசத்தின் 4 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை இன்று பகலிலிருந்து தனிமைப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதற்கமைய, சிலாபம் நகர எல்லைக்குட்பட்ட வடக்கு,தெற்கு கடற்கரை பிரிவு, குருசபாடு, ஏகொடவத்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதால், இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக புத்தளம் மாவட்ட பிரதி சுகாதார சேவை பணிப்பாளர், வைத்தியர் தினுசா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .