2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மூவர் கைது

S. Shivany   / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன் 

புத்தளம் களப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது,  சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன்,  மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பொலிஸ் போதைப்பொருள்  ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய,  குறித்த  சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புத்தளம் களப்பு பகுதியில், நேற்று(11) மாலை,  புத்தளத்தைச் சேர்ந்த இருவர் இன்னுமொருவருக்கு  சிகரெட்டுகளை விற்பனை செய்ய முற்பட்டபோதே, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பின்போது, சொகுசு கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டொரிடமிருந்து  600 சிகரெட்டுகள் அடங்கிய 60 பண்டல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .