2021 ஒக்டோபர் 17, ஞாயிற்றுக்கிழமை

‘சுங்கத்தை சீரமைக்க கடும் நடவடிக்கை’

Gavitha   / 2021 ஜனவரி 24 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுங்கத்திணைக்களத்தில் இடம்பெறும் ஊழல்களை ஒழிப்பதற்காக, அதன் பணிப்பாளர் ஜெனரல் பதவிக்கு இராணுவ அதிகாரி ஒருவரை தான் நியமித்ததாகவும் எனினும் அது வெற்றியளிக்கவில்லை என்பதால், எதிர்காலத்தில் விரைவாக இதை விட கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

களுத்துறை வளல்லாவிட்ட, யட்டபாத்த கிராமத்தில், நேற்று (23) மாலை நடைபெற்ற 'கிராமத்துடன் கலந்துரையாடல்' நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தான் இந்நாட்டின் ஜனாதிபதியாக கடமையைப் பொறுப்பேற்கும்போது, ஊழல் என்பது ஒரு பாரிய விடயமாக இருந்தத என்றும் அந்த வகையில், சுங்கத்திலேயே அதிக ஊழல் இடம்பெற்று வந்தது என்றும் அவர் கூறினார்.

இதற்காககத்தான், இராணுவ அதிகாரியை, பணிப்பாளர் ஜெனராக நியமித்ததாகவும் எனினும் அது வெற்றியளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே நான் விரைவில் கடுமையான முடிவுகளை எடுக்க, அனைத்து சுங்க அதிகாரிகளையும் வெளியேற்றியாவது, இதை ஒழுங்கமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .