2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

நடமாடும் நூலக சேவை

Editorial   / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன் 

இலக்கியம் மற்றும் வாசிப்பு மாதமான ஒக்டோபர்  மாதத்தையொட்டி, புத்தளம் நகர சபை பொது நூலகம் ஏற்பாடு செய்திருந்த  நடமாடும் நூலக சேவை, நேற்று (23)  புத்தளம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள ஐ.ப்.எம்.முன்பள்ளியில் நடைபெற்றது.

புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸின் வழிகாட்டலில், மாணவர்களுக்கு பாலர் கல்வியில் இருந்து வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த நூலக இடம்பெயர் சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சேவையை,  புத்தளம் நகரில் அமைந்துள்ள  நகர சபைக்குட்பட்ட 40 க்கும் மேற்பட்ட முன்பள்ளிகளில்  முன்னெடுப்பதற்குத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக, நகர பிதா கே.ஏ. பாயிஸ் தெரிவித்தார்.

மாதத்துக்கு இரண்டு முறை  இந்த முன்பள்ளிகளில்,  இத்தகைய நடமாடும் சேவைகளை நடத்தி,  அங்கு பயில்கின்ற மாணவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் பெறுமதி வாய்ந்த நூல்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .