Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 செப்டெம்பர் 22 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
மதுரங்குளி மஹகும்புக்கடவல ஊடாக, ஆண்டிகம செல்லும் பிரதான வீதியின் புனரமைப்பு பணிகள், நேற்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டபா ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை (19) புத்தளத்தின் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட, கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, மஹகும்புக்கடவல ஊடாக ஆண்டிகம செல்லும் பிரதான வீதியை புனரமைக்க வேண்டியதன் அவசியம் பற்றி, ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த வீதியானது போக்குவரத்து செய்ய முடியாதளவுக்கு மிகவும் குன்றும் குழியுமாக காட்சியளிப்பதால், மழை காலங்களில் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. இதனையிட்டு பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்து ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து, குறித்த வீதியை புனரமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை (21) காலை குறித்த வீதியை காபட் வீதியாக புனரமைக்கும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சர்களான நிமல் லன்சா, சனத் நிஷாந்த பெரேரா, பிரியங்கர ஜயரத்ன, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அசோக்க பியந்த, சிந்தக்க மாயாதுன்ன, புத்தளம் பிரதேச சபைத் தலைவர் அஞ்சன சந்தருவன், பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர். பிரேமசிறி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் தொகுதி அமைப்பாளர் ஏ.எச்.எம்.ரியாஸ் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago