2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

சக்கர கதிரைகள் அன்பளிப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன் 

புத்தளம் வை.எம்.எம்.ஏ. பேரவையின் ஏற்பாட்டில், புத்தளம் நகரில் இங்காணப்பட்ட விசேட  தேவையுடையோர் மற்றும் முதியோரை உள்ளடக்கிய மூவருக்கு,  சக்கர கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் ஏற்பாட்டில், புத்தளம் வை.எம்.எம்.ஏ. பேரவை அமைப்பினர், அவர்களது வீடுகளுக்குச் சென்று நேற்று (26) காலை  இவற்றைக்  கையளித்தனர்.

இந்நிகழ்வில், வை.எம்.எம்.ஏ.பேரவையின் புத்தளம் மாவட்ட பணிப்பாளர் முஜாஹித் நிஸார், தலைவர் என்.எம்.எம்.ஹிஜாஸ், உறுப்பினர் ஆசிரியர் எஸ்.ஆர்.எம்.முஹுசி ஆகியோர் கலந்துகொண்டனர்.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .