2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

ஐஸ் மற்றும் ஹெரோய்ன் சகிதம் நால்வர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 10 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

புத்தளம்-மாரவில மற்றும் வென்னப்புவ ஆகிய பிரதேசங்களில், நேற்று (09)  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் மற்றும் ஹெரோய்ன் போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம்- முல்லியபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 27 கிராம்  ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் புத்தளம்-அபயராம பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய மூவரும், மாரவில-மரதவில்ல மற்றும் வென்னப்புவ புதிய வீதி ஆகிய பகுதிகளில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸா​ர் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .