2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

பொலன்னறுவை வைத்தியசாலையில் ஊழியர் பற்றாக்குறை

Suganthini Ratnam   / 2011 மார்ச் 31 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                                           

பொலன்னறுவை ஹபரன வைத்தியசாலையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையைத் தீர்த்து மக்களுக்கு சிறந்தசேவையை வழங்குவதற்கான துரித நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடமத்திய மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்தார்.

ஹபரன வைத்தியசாலையில் இரவு வேளைகளில் சில பிரிவுகளில் ஊழியர் பற்றாக்குறை காணப்படுவதால், நோயாளிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர் இதனையிட்டே  இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போது இவ்வைத்தியசாலையில் நான்கு ஊழியர்கள் மாத்திரமே கடமையிலுள்ளதாகவும் வடமத்திய மாகாண அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .