2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

பொசன் உற்சவத்தையொட்டி புதிய சட்டம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                        

பொசன் உற்சவ காலப்பகுதியில் அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் பல புதிய சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்டச் செயலாளரும் பொசன் கமிட்டியின் தலைவருமான எச்.எம்.கே.ஹேரத் தெரிவித்தார்.

விளம்பரங்கள், சுவரொட்டிகள், பதாதைகள், ஒலிபரப்புச் சாதனங்கள் பாவனை இசைக்கருவிகள் விற்பனை நிலையங்கள் போன்றவைகளின் பாவனை தொடர்பாக கடுமையான நடைமுறை பின்பற்றப்படவுள்ளது.

காட்சிப்படுத்தப்படவுள்ள சகல விளம்பரங்கள், சுவரொட்டிகள், பதாதைகளிலும் புத்த தர்ம விழுமியங்களைக் கடைப்பிடிப்பதாக காணப்பட வேண்டும். புத்த தர்ம விழுமியங்களை கடைப்பிடிக்காத விளம்பரங்கள், சுவரொட்டிகள், பதாதைகள் அகற்றப்படுவதற்கான பணிப்புரை பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X