2022 ஜூலை 04, திங்கட்கிழமை

டயலொக், MAS, Hemas மற்றும் CBL ஆகியவற்றின் “மனிதநேய ஒன்றிணைவு” நிவாரணம்

J.A. George   / 2022 மே 21 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய அவசரகால நிவாரண விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பெரு நிறுவனங்களையும் நாடளாவிய ரீதியிலான மேற்படி அவசர நிவாரணப் பணியில் இணையுமாறு அழைப்பு

தற்போது நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நாடு முழுவதும் மிகவும் பாதிக்கபட்டுள்ள சமூகங்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்கும் நோக்கிலான, “மனிதநேய ஒன்றிணைவு” நிவாரண முயற்சியானது, தற்போதைக்கு அத்தியாவசிய தேவையுடைய 10,000 குடும்பங்களுக்கு இந்நிவாரணம் சென்றடையும் வகையில் அதன் முதலாவது மைல்கல்லை எட்டியுள்ளது.”

மேற்படி செயற்றிட்டத்தின் நிறைவேற்று பங்காளியான சர்வோதய சிரமதான சங்கம் மற்றும் சுயாதீன கணக்காய்வாளர் PwC Sri Lanka உட்பட ஒருமித்த எண்ணம் கொண்ட பங்காளிகளுடன் கைகோர்த்தவாறு, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, MAS Holdings, Hemas Holdings PLC மற்றும் CBL குழுமம் ஆகியவற்றின் ஒன்றிணைவில் இந்த “மனிதநேய ஒன்றிணைவு” நிவாரண செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகும்.

நாடளாவிய ரீதியில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் அடிப்படைத்  தேவைகள் எதுவுமே இல்லாமல் அவதியுறும் 200,000ற்கும் மேற்பட்ட பாதிக்கபட்டுள்ள வறிய குடும்பங்கள் மற்றும் சமூகங்களை சென்றடையும் வகையிலான உன்னத  நோக்கிலேயே இந்த நிவாரண திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ITN, சியத்த, சுவர்ணவாஹினி, டிவி தெரண மற்றும் வசந்தம் ஆகியன ஊடக பங்காளிகளாக இந்த முயற்சிக்கு ஊடக அனுசரணையை வழங்கி வருகின்றன.

அதற்கமைய, தற்போது நாட்டின் அனைத்து 25 மாவட்டங்களிலும் குறித்த அவசரகால நிவாரணம் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. மேலும், பயனுள்ள பொருளாதார முன்மாதிரி திட்டத்தினூடாக நிலையான நலன் பரிமாற்ற முறையொன்று நாட்டில் நிறுவப்படும்வரை மேற்படி “மனிதநேய ஒன்றிணைவு” நிவாரண வேலைத்திட்டமானது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை முழுவதிலும் உள்ள 200,000க்கும் மேற்பட்ட பாதிக்கபட்டுள்ள குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதை இலக்காக கொண்ட இந்த நிவாரண பணியில் ஒன்றிணைய முன்வருமாறு அனைத்து நிறுவனங்களையும் “மனிதநேய ஒன்றிணைவு” அழைப்பு விடுக்கின்றது.   

மனிதநேய ஒன்றிணைவு நிவாரண பணிகள் குறித்து மேலதிக தகவல்களை - https://www.dialog.lk/corporate மூலம் அறிய  முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .