2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு SLT-MOBITEL நிவாரணம்

S.Sekar   / 2021 ஜூன் 28 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, இலங்கைக்கு உதவும் தனது முயற்சிகளின் மற்றுமொரு அங்கமாக, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களின் உதவியுடன், வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் போத்தல்களை பகிர்ந்தளிப்பதற்கு முன்வந்துள்ளது.

அதன் பிரகாரம், கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சுதுநெலும்புர தொடர்மனைத் தொகுதியில் வசிக்கும் மக்களுக்கும், கம்பஹா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த பல பிரதேசங்களுக்கு மக்களுக்கு இவ்வாறான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் போத்தல்கள் அடங்கிய பொதிகளை SLT-MOBITEL விநியோகித்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .