2023 ஜூன் 07, புதன்கிழமை

தலைவர்களை உருவாக்கும் மாற்றத்துக்கு பவர் முன்னுரிமை

S.Sekar   / 2023 மார்ச் 03 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ. பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட் நிறுவனம், தனது ஊழியர்களை மையப்படுத்தி, புதிய பணியிடச் சூழல் மற்றும் புதிய சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையில் அவர்களின் ஆற்றல்களைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

பவர் நிறுவனத்தில் சகல ஊழியர் அனுபவ செயற்பாடுகளையும் முன்னெடுப்பதில், சாதாரண வியாபாரச் செயற்பாடுகள் மற்றும் ஊழியர்களின் நிபுணத்துவ செயற்பாடுகள் போன்றன அடங்கியிருப்பதுடன், அவற்றை மேற்கொள்வதில் நிறுவனத்தின் மனித வளங்கள், நிர்வாகம், கொள்முதல் மற்றும் நிலைபேறாண்மை போன்ற செயற்பாடுகளுக்கான பிரதி பொது முகாமையாளர் கென் விஜயகுமார் ஈடுபட்டுள்ளார். இவர், நாட்டில் மனித வளங்கள் முகாமைத்துவ செயற்பாடுகளுக்கான முன்னணி நிபுணத்துவ அமைப்பான, இலங்கை பட்டைய நபர்கள் முகாமைத்துவ நிறுவகத்தின் (CIPM) தற்போதைய தலைவராக திகழ்கின்றார். இலங்கை CEO சஞ்சிகையினால், 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த மனித வளங்கள் வியாபாரத் தலைவராக கென் கௌரவிக்கப்பட்டிருந்தார்.

பவர் அண்மையில், இலங்கையில் சிறுவர் ஆதரவு அனுகூலத்தை முதன் முதலில் அறிமுகம் செய்திருந்தது. அதிகரித்துச் செல்லும் பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில், ஊழியர்களுக்கு பெருமளவில் அனுகூலமளிக்கும் வகையில் இது அமைந்திருக்கும். நிறுவனம் தொடர்ந்தும் அதன் ஊழியர்களில் கவனம் செலுத்தி வருவதுடன், தொற்றுப் பரவல் காலப்பகுதியில், அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கைகள் முதல், பல்வேறு நன்கொடைகள் மற்றும் உளவியல் நலன்பேணும் திட்டங்களையும் முன்னெடுத்திருந்தது.

சில செயற்பாடுகளில் 15 நாட்களுக்கான பெற்றோர் விடுமுறை, நிவாரணம், புதிய வாய்ப்புகள் எழும் போது, உள்ளக திறன் பகிர்வுக்கு முன்னுரிமை அடங்கலாக ஊழியர்களுக்கு கைகொடுக்கும் திட்டங்கள், பெறுமதி வாய்ந்த வரவேற்பு பொதிகள் அடங்கலாக, துரிதமாக உள்வாங்கல் மற்றும் ஒன்றிணைப்புத் திட்டங்கள், சுய சேவை வசதிகளினூடாக, தினசரி சிற்றுண்டிகளை கொள்வனவு செய்யக்கூடிய பெறுமதிப் பெட்டிகள் போன்றன அடங்கியுள்ளன. கூர்மையாக செவிமடுத்தல், ஈடுபாடுகளைப் பேணல் மற்றும் சகல ஊழியர்களின் மைல்கல் சாதனைகளான பிறந்தநாட்கள், வருடப்பூர்த்திகள் மற்றும் சாதனைகள் போன்றவற்றை உள்ளக நாளிகைகளான Yammer ஊடாக கொண்டாடல் போன்றவற்றை பவர் முன்னெடுக்கின்றது. இதற்கு மேலாக, உயர் ஊழியர் பெறுமதி வகைப்படுத்தலுக்காக சமூக ஊடக பிரசன்னத்தையும் கொண்டுள்ளது.

ஊழியர் வளர்ச்சி மற்றும் வெற்றிகரமான செயற்பாடுகள் போன்றன புகழ்பெற்ற 9 அடுக்கு கட்டமைப்பின் அடிப்படையில் அமைந்துள்ளதுடன், இதனூடாக நபர் ஒருவரின் வினைத்திறன் மற்றும் வாய்ப்புகள் போன்றவற்றினூடாக, அதிகளவு வெளிப்படைத்தன்மை மற்றும் மேலதிகாரிகளின் பக்கசார்புடைய தன்மையை அகற்றல் போன்றவற்றை வழங்கும்.

கடந்த ஆண்டு, பவர் நிறுவனத்தினால், பவர் தலைமைத்துவ ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டம் (BLG) அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. ஊழியர்களுக்கான பரிபூரண பயிற்சி மற்றும் விருத்தியை பெற்றுக் கொடுத்து, வியாபார வளர்ச்சியுடன், விரிவாக்கல் திட்டத்தின் பிரகாரம் அவர்களுக்கு எதிர்காலத்தில் தலைமைத்துவ பொறுப்புகளை ஏற்கச் செய்யும் இலக்குடன் அமைந்துள்ளது. AIESEC Association internationale des étudiants en sciences économiques et commerciales (பொருளியல் மற்றும் வணிகம் ஆகியவற்றிலுள்ள மாணவர்களுக்கான சர்வதேச சம்மேளனம்) உடன் பவர் கைகோர்த்து, இளம் தலைமைத்துவப் பண்புகளை, பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மேம்படுத்தி, திட்டமிடப்பட்ட தொழிற்பயிற்சிகளை ஏற்படுத்தி தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க முன்வந்திருந்தது.

நபர் ஒருவரின் பிரத்தியேக வளர்ச்சியில் நிறுவனம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதுடன், ஊழியர்களை உயர் கல்வியை தொடரச் செய்யவும், நிபுணத்துவ தகைமைகளைப் பெற்றுக் கொள்ளவும் வசதி வாய்ப்புகளை வழங்குகின்றது. நிர்வாகப் பிரிவுகளிலுள்ளவர்களுக்கும், உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் காணப்படும் பல்வேறு நிபுணத்துவ அமைப்புகளில் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ள உதவியாக அமைந்துள்ளது. இதில், அலுவலக காப்பாளர் பதவிகளை ஏற்றலும் அடங்கியுள்ளன. விசேடத்துவமான கூட்டாண்மை மற்றும் சமூக பண்பு நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்கக்கூடிய வகையில் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், பவர் நிறுவனம் தனது பவர் டோஸ்ட்மாஸ்டர் கழகத்தை (BTC) உத்தியோகபூர்வமாக நிறுவியிருந்தது. கொழும்பு டோஸ்ட்மாஸ்டர்ஸ் கழகத்தின் வழிகாட்டல்களின் கீழ் இந்த கழகம் நிறுவப்பட்டதுடன், நிறுவனத்தினால் அங்கத்துவம் பெறப்பட்டுள்ளது. இதனூடாக, ஊழியர்களுக்கு தமது பொதுப் பேச்சுத்திறனை மேம்படுத்திக் கொள்ளவும், சுய நம்பிக்கையை கட்டியெழுப்பிக் கொள்ளவும் முடியும் என்பதுடன், பரந்தளவு தொடர்பாடல் பண்புகளை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .