2021 ஜூலை 28, புதன்கிழமை

எயார்டெல் லங்கா ஊழியர்களுக்கு சிறப்பு விருதுகள்

S.Sekar   / 2021 மே 22 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் தொற்றுநோய் காரணமாக உலகம் முழுவதிலுமுள்ள தொழிற்சாலைகள் தமது வர்த்தக நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கும் அதனை தக்க வைத்துக் கொள்வதற்கும் பல சவால்களை எதிர்கொள்கின்றன. மேலும் இந்த சவால் நிறைந்த சூழலை எதிர்கொள்ளும் மக்களை அங்கீகரிக்க வேண்டிய முக்கியமான தருணமாகவும் இது உள்ளது. இந்த நிலையில் 2020ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் (Q3 FY2020) தனது அணியில் வெற்றிகளையும் மற்றும் முதன்மையான திறமைகளையும் வெளிப்படுத்தியவர்களை அங்கீகரிப்பதற்காக எயார்டெல் லங்கா சிறப்பு விருது வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த விருது வழங்கும் நிகழ்வு தொடர்பில் கருத்து தெரிவித்த எயார்டெல் லங்காவின் முகாமைத்துவப் பணிப்பாளரும்> பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஷீஷ் சந்திரா, 'கடந்த ஆண்டு முழுவதும் சவால் நிறைந்த ஆண்டு என்பது ஒரு இரகசியமல்ல. எல்லாவற்றையும் மீறி எயார்டெல் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டதையிட்டு நான் பெருமிதம் அடைகிறேன்.” என தெரிவித்தார்.

'கடந்த ஆண்டில், எமது பாவனையாளர்கள் முன்பை விட அதிகமாக எமது சேவைகளையும் ஆதரவையும் நம்பியிருந்தார்கள். இதன் அர்த்தம் முன்னெப்போதும் இல்லாதவாறு எமது பங்களிப்பை தொடர்ந்து வழங்க வேண்டியிருந்தது. இந்த நிகழ்ச்சியில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிபெற்ற வெற்றியாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த அணிக்கும் இந்த நிகழ்ச்சி உற்சாகமூட்டுகிறது. நாம் எமது வெற்றியை நோக்கி முன்னோக்கிச் செல்லவும் மிகுந்த நம்பிக்கையைத் தருவதோடு, எதிர்கால வளர்ச்சிப் பயணத்திற்கும் அவர்களுக்கு மகத்தான பலத்தை அளிக்கிறது.”

நான்கு பிரிவுகளில் தொலைத்தொடர்பு துறையில் சிறந்தவர்களுக்கு 4 பிரிவுகளில் பாராட்டுக்களும் வழங்கப்பட்டதோடு இந்த நிகழ்விற்கு அவர்களது உறவினர்கள் மற்றும் குடும்ப அங்கத்தினர்களும் கலந்து கொண்டனர். மேலும் வருவாய் மேம்பாட்டிற்காக சிறந்த பங்களிப்பு செய்த தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு ‘Achievers Awards – Sales’ விருதுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

‘Achievers Awards – Customer Centricity’ விருதானது, வாடிக்கையாளர் பகுப்பாய்வு மற்றும் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை கணிசமாக மேம்படுத்துவதில் புத்தாக்க பங்களிப்புகளை வழங்கியவர்கள் – மேம்பட்ட பகுப்பாய்வு, புதிய தயாரிப்புக்கள் / சேவைகள் அல்லது பிற திறன்களை பயன்படுத்துதல் போன்றவற்றுக்கு வழங்கப்படுகிறது.

இதேபோல், ‘Achievers Awards – Functional’ விருதானது, எயார்டெல் லங்காவின் நோக்கம் மற்றும் மதிப்புக்கள் ஆகியவற்றில் தொடர்ந்து சிறந்து விளங்குதல் மற்றும் வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் தனிநபர்களின் விதிவிலக்கான செயல்திறனை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படுகிறது. தொடக்கத்திலிருந்தே தொலைத்தொடர்பு துறையிலுள்ள எயார்டெல் உறுப்பனர்களின் நம்பிக்கையான மற்றும் உறுதியான முயற்சியை அங்கீகரிக்கும் விதத்தில் ‘நீண்டகால சேவை விருதுகள்’ வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .