2023 ஜூன் 01, வியாழக்கிழமை

மீண்டும் கந்தளாய் சீனி

Johnsan Bastiampillai   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தளாய் சீனி உற்பத்தி தொழிற்சாலையின் பணிகள் சுமார் 30 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

MG சுகர்ஸ் லங்கா பிரைவட் லிமிடெட் நிறுவனத்துக்கு குறித்த சீனித் தொழிற்சாலையின் காணி, சொத்துகள் மற்றும் சேவைகள் போன்றவற்றை குத்தகைக்கு வழங்கியுள்ளதைத் தொடர்ந்து இந்தத் தொழிற்சாலையின் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்தத் தொழிற்சாலையின் மறுசீரமைப்புப் பணிகள் 2021 ஜனவரி மாதத்தின் முற்பகுதியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து. 2023 ஆம் ஆண்டில் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் இலக்கை நிவர்த்தி செய்யும் வகையில் பணிகள் முன்னெடுக்கப்படும் என நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். MG சுகரின் உரிமையாண்மை அரசாங்கம் மற்றும் முதலீட்டாளர்களான மௌசி சலீம் மற்றும் மெந்தல் ஆகியவர்களின் வசம் காணப்படும். இந்த அணி, கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் மறுசீரமைப்புப் பணிகள் முழுவதையும் முன்னெடுக்கும்.

இதுவரையில் சகல பொறியியல் வடிவமைப்புகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

சீனி உற்பத்தித் துறையில் பல வருட கால அனுபவத்தைக் கொண்ட பூகர் டேட் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளதுடன், துறைசார் பொறியியல், கொள்முதல் மற்றும் நிர்மாணம், செயற்பாடுகள், பராமரிப்பு ஒப்பந்தம் ஆகியவற்றை Grupo TS முன்னெடுக்கவுள்ளதுடன், விவசாய செயற்பாடுகளுக்கான EPC மற்றும் O&M ஒப்பந்தக்காரராக Netafim இணைந்துள்ளது.

விவசாய மற்றும் நீர்ப்பாசன பணிகளுக்கு ஐரோப்பிய சாதனங்கள்,  இஸ்‌ரேலின் தொழில்நுட்பத்தையும் இந்தத் தொழிற்சாலை பயன்படுத்தும். நீர்ப் பாவனையை சேமிக்கும் வகையில் இந்தத் தொழிற்சாலை நவீன நீர்ப்பாசன கட்டமைப்பையும் கொண்டிருக்கும்.

27.5 MW திறன் படைத்த மின் உற்பத்தி நிலையமொன்றும் நிறுவப்பட்டு, அதிலிருந்து 10 MW தேசிய மின்விநியோகக் கட்டமைப்புக்கு வழங்கப்படும்.

உள்நாட்டு பாவனைக்காக வருடாந்தம் 80,000 தொன் சீனியை உற்பத்தி செய்யும் ஆற்றலைக் கொண்டிருக்கும் என்பதுடன், அதனூடாக சுமார் சீனி இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகையில் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருடாந்தம் சேமிக்கக்கூடியதாக இருக்கும்.

இந்தத் திட்டத்தினூடாக 3,500 நேரடி தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதுடன், மேலும் 3,000 விவசாயிகள் அனுகூலம் பெறுவார்கள்.

மேலும் நாடளாவிய ரீதியிலிருந்து 10,000 - 15,000 மறைமுக தொழில் வாய்ப்புகளும் உருவாக்கப்படும். மேலும் இந்தத் தொழிற்சாலையில் எதனோல் உற்பத்தியும் மேற்கொள்ளப்படும், இதனூடாக இறக்குமதி செய்யப்படும் எதனோலின் அளவை குறைத்து, அந்நியச் செலாவணிக்கு பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும்.

இந்தத் திட்டத்தினூடாக மகாவலி அதிகார சபைக்கு ஜனரஞ்ஜன நீர்பம்பித் திட்டத்துக்கு உதவிகள் வழங்கப்படுவதுடன், அதனூடாக மெதிரிகிரிய மற்றும் கவுதுல்ல பகுதிகளில் புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்ட 30000 ஹெக்டெயர் விவசாய நிலங்களுக்கு நீர் விநியோக வசதிகளை வழங்கக்கூடியதாக இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .