Editorial / 2021 ஜூன் 24 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாவட்டத்தில் புதிய வகையான கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
வெள்ளவத்தை, நாரஹேன்பிட்டிய மற்றும் கொம்பத்தெரு ஆகிய பிரதேசங்களிலேயே புதிய வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
வெள்ளவத்தையில் 58 பேரும், கொம்பத்தெருவில் 23 பேரும், நாரஹேன்பிட்டியவில் 21 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இன்றுகாலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், கொழும்பு மாவட்டத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 318 பேர் இனங்காணப்பட்டனர்.
பம்பலப்பிட்டிய-13 பேர்
மட்டக்குளிய – 36 பேர்
அவிசாவளை- 39 பேர்.
தெமட்டகொட -12 பேர்
கிராண்ட்பாஸ்-11 பேர்
இந்நிலையில், இன்றுக்காலை 6 மணியுடன் நிறைவடைந்த, 24 மணிநேரத்தில், நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 2,196 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து நாடுதிரும்பிய இலங்கைப் பிரஜைகள் 18 பேரும், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025