2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு SLT-MOBITEL உதவி

S.Sekar   / 2021 ஜூலை 19 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, கொவிட்-19 பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்டத்தின், மகாஓயா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பொல்லெபெத்த கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் பழங்குடியினருக்கு உலர் உணவுப் பொருட்கள் விநியோகத்தை அண்மையில் மேற்கொண்டிருந்தது.

அதன் பிரகாரம், நாளாந்த அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியாமல் நெருக்கடியான நிலைக்கு முகங்கொடுத்துள்ள சுமார் 285 குடும்பங்களுக்கு அத்தியாவசிய ஆகாரப் பொருட்கள் அடங்கலாக நிவாரணப் பொதிகள் 285 ஐ வழங்கியிருந்தது. இதற்கு அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் மகாஓயா பிரதேச செயலகம் போன்ற அரச நிறுவனங்களின் ஆதரவு கிடைத்திருந்ததுடன், அம்பாறை மாவட்ட செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க மற்றும் மகாஓயா மேலதிக பிரதேச செயலாளர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தொற்று நோய் பரவல் காரணமாக நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையை தணிக்கும் வகையில் பல்வேறு செயற்திட்டங்களை SLT-MOBITEL முன்னெடுத்துள்ளது. சுகாதார சேவை ஊழியர்களுக்கு ஆதரவளிப்பது, சுகாதார சாதனங்களை அன்பளிப்பு செய்வது, பிரத்தியேக பாதுகாப்பு அங்கிகளை அன்பளிப்பு செய்வது, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இணைப்புத் தீர்வுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்குவது, தொடர்ச்சியாக தொடர்பாடல் இணைப்புகளை பேணுவதற்கு அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பது அடங்கலாக பல நடவடிக்கைகள் இவற்றில் அடங்குகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .