2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ் 1 பில்லியன் ரூபாய்க்கு அதிகமான தொகையை வழங்கியது

S.Sekar   / 2021 ஜூன் 03 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் 1 பில்லியன் ரூபாய்க்கு அதிகமான தொகையை கொடுப்பனவாக மேற்கொண்டிருந்ததாக யூனியன் அஷ்யூரன்ஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது. இதில் 8.9 மில்லியன் ரூபாய் கொவிட்-19 சார் உரிமை கோரல்களும், 500 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான தொகை முதிர்வுத் தொகைகளாகவும் அடங்கியிருந்தன. மேலும், 2,102 வைத்தியசாலை அனுமதிக்கான உரிமை கோரல்கள், 38 அங்கவீன உரிமை கோரல்கள் மற்றும் 1,120 காப்புறுதிசார் கடன்கள் போன்றன 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் செலுத்தப்பட்டிருந்தன.

“உங்கள் வாழ்க்கைக்கு எங்களது பலம்” எனும் எமது தொனிப்பொருளுக்கமைய, இலங்கையர்களின் கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கு பிரத்தியேகமான மற்றும் ஈடுஇணையற்ற வகையில் உதவிகளை வழங்கி வருகின்றது. டிஜிட்டல் மயமாக்கத்தினூடாகவும் செயன்முறை மேம்படுத்தல் நடவடிக்கைகளினூடாகவும் உரிமை கோரல்களை வழங்கும் செயன்முறையை மேம்படுத்தியுள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “அதிகளவு நேர விரயம் மற்றும் தாமதம் போன்ற காரணிகளால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் செயன்முறையாக உரிமை கோரல்கள் கையாளல் அமைந்துள்ளது. யூனியன் அஷ்யூரன்சின், வாடிக்கையாளர் மையப்படுத்திய பயணத்தில் இந்த விடயம் மிகவும் முக்கியமான அங்கமாக அமைந்துள்ளது.வெளிச் செல்கை – உள்வருகை செயன்முறையை நாம் நடைமுறைப்படுத்தியுள்ளதுடன், எமது காப்புறுதிதாரர்களுக்கு சௌகரியமான உரிமை கோரல் செயன்முறையை நாம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.” என்றார்.

கடந்த 18 மாத காலப்பகுதியில், வாடிக்கையாளர்களை மையப்படுத்தி யூனியன் அஷ்யூரன்சினால் அதிகளவு காலம் தேவைப்படும் செயன்முறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருந்தன. நிறுவனத்தின் சுய சேவையளிக்கும் app போன்றவற்றினூடாக கிளைக்கு விஜயம் செய்யாமல் ஒப்பற்ற உரிமை கோரல்கள் சமர்ப்பிப்பு போன்றன மேற்கொள்ளப்பட்டுள்ளன. பணமில்லா கொடுப்பனவு முறைமையையும் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. இதனூடாக காப்புறுதிதாரர்களுக்கு வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக் கொண்டதன் பின்னர் வெளியேறும் போது நிறுவனம் அதற்கான கட்டணத்தை செலுத்தும். இதனூடாக காப்புறுதிதாரர்களுக்கு பெருமளவு சிக்கல் நிலை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.  பின்புல செயன்முறைகளில் ஏற்படுத்தப்பட்ட மேம்படுத்தல்களினூடாக, கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் காலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக, நஷ்டஈடு கோரிக்கைகளை சமர்ப்பிப்பது முதல் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் காலம் குறுகியதாக்கப்பட்டுள்ளதுடன், வினைத்திறன் வாய்ந்ததாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய உறுதியற்ற சூழலிலும், வாடிக்கையாளரை மையப்படுத்திய சேவை வழங்குநராக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்வதுடன், துறைக்கு சாதகமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்ப ரீதியில் செயற்படுத்தப்பட்ட தீர்வுகளைக் கொண்டுள்ளது. இந்த முயற்சிகளுக்காக, சர்வதேச நிதி விருதுகள் வழங்கும் நிகழ்வில் இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் மையப்படுத்திய காப்புறுதி சேவை வழங்குநர் எனும் பெருமைக்குரிய கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .