Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 ஏப்ரல் 01, சனிக்கிழமை
S.Sekar / 2022 டிசெம்பர் 30 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சமூக- பொருளாதார பின்னடைவை வலுபடுத்தும் வகையில், கடல்சார் துறையானது நாடு திரும்பிய மற்றும் ஆர்வமுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது என சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) அடையாளப்படுத்தியுள்ளது. கடல் மற்றும் கடற்றொழில் சார் அறிவியல் பயிற்சிநெறியினை நிறைவு செய்த 22 பயிற்சியாளர்களுக்கான பட்டமளிப்பு விழாவை மஹாபொல துறைமுகம் மற்றும் கடல்சார் கல்விச்சாலை ஆகியன, ஜப்பான் அரசாங்கத்தின் ILO ஆதரவுடனும் இலங்கை கடற்படையினர் தேசிய ஒன்றியத்தின் (NUSS) அனுசரணையுடனும் அண்மையில் வெற்றிகரமாக நடத்தியது.
இப்பயிற்சி பாட நெறியானது, கப்பல் தள அதிகாரிகளுக்கு நாளாந்தம் தேவையான உதவிகளை வழங்குவதற்குத் தேவையான திறன்கள் மற்றும் அறிவை பயிற்சியாளர்கள் பெறுவதற்கு ஏதுவான வகையில் முறையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட ரீதியிலான பயிற்சியை வழங்கியது. இப்பயிற்சி பாட நெறியானது, நாளாந்த செயல்பாட்டு நடவடிக்கைகளான டெக்-ரேட்டட் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை இயக்குவதற்கான அனுபவம், கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் கப்பல் தள அதிகாரிகளுக்கு உதவுதல் போன்ற அனைத்து செயல்பாட்டு நடவடிக்கைகளுக்குமான பயிற்சிகளை உள்ளடக்கியது.
சான்றுதழ் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி “ஜப்பானின் உதவி புலம்பெயர்ந்தோருக்கு உண்மையான வேலைவாய்ப்பு மற்றும் திறன் வாய்ப்புக்களைப் பெறுவதற்கு உதவியாக இருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். நாடு திரும்பியோரது நடைமுறை திறன்களை வலுப்படுத்துவதையும் அவர்களின் தொழில்முனைவை ஊக்குவிப்பதையுமே இச் செயற்றிட்டத்தின் நோக்கமாக ஜப்பான் அரசாங்கம் கொண்டுள்ளது” என தெரிவித்தார்.
இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான ILO நாட்டின் பணிப்பாளர் சிம்ரன் சிங், அத்தியாவசிய வேலைகளை உருவாக்கக் கூடிய மற்றும் பாதிக்கப்படகூடியவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தக் கூடிய இத்தகைய பயிற்சி பாடநெறியை வழங்குவதற்கான யோசனை மற்றும் ஆற்றலை ஒருங்கிணைத்த துறைமுக அதிகாரசபை, மஹபொல பயிற்சி மையம் மற்றும் கடலோடிகள் தேசிய ஒன்றியம் என்பவற்றினை பாராட்டியதோடு தனது கற்றலை வெற்றிகரமாக முடித்த முதல் தொகுதி பட்டதாரிகளுக்கும் தனது வாழ்த்தினைத் தெரிவித்தார்.
இத்துவக்க முயற்சியானது ஜப்பான் மக்களின் ஆதரவுடன், ILOவின் “இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் சமூக பொருளாதார மறு ஒருங்கிணைப்பு திட்டம்” ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
42 minute ago
53 minute ago
2 hours ago