2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

தொழில் வாய்ப்புகளை வழங்க தொழில்நுட்ப பூங்காக்கள்

S.Sekar   / 2021 ஜூன் 21 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயிரக் கணக்கான இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், தகவல் தொழில்நுட்ப சேவை ஏற்றுமதிகளினூடாக அந்நியச் செலாவணியை கவர்ந்திழுக்கும் மேலதிக வழிமுறையாகவும் ஐந்து தொழில்நுட்ப பூங்காக்களை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

காலியில் முதலாவது பூங்கா தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் உதவியுடன் நிறுவப்படுகின்ற நிலையில், மேலும் நான்கு பூங்காக்கள், கண்டி, குருநாகல் மற்றும் வடக்கு, கிழக்கில் நிறுவப்படவுள்ளன.

ஜுலை மாதத்தில் ஆரம்ப கட்ட நிறுவும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், முதல் தொகுதிப் பணிகள் பூர்த்தியடைந்ததும், தகவல் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய 500 தொழில் வாய்ப்புகள் குறுங்கால அடிப்படையில் உருவாக்கப்படும் என்பதுடன், மேலும் 2000 தொழில் வாய்ப்புகள் நடுத்தரளவு காலப்பகுதியில் உருவாக்கப்படும். இந்த பூங்காக்களில் தொழில்நுட்ப நகர பூங்காக்களை நிறுவுவதற்கு ஏற்கனவே சில நிறுவனங்கள் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளன. இந்தப் பூங்காக்களில் நவீன வசதிகள், 5G தொழில்நுட்பம் மற்றும் பொது வசதிகள் அனைத்தும் உள்ளடங்கியிருக்கும்.

காலி மாவட்டத்தில், தகவல் தொழில்நுட்பத்தில் தமது தொழில்கல்வியை பூர்த்தி செய்துள்ள ஆயிரக் கணக்கான இளைஞர்கள் இந்த தொழில்நுட்ப பூங்காவினூடாக அனுகூலம் பெறுவார்கள் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்தப் பூங்காக்களில் உள்நாட்டு தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க நிறுவனங்களுக்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X