2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

செலான் வங்கியின் “பொறுப்பு வாய்ந்த வங்கியியல்”

S.Sekar   / 2021 ஜூலை 08 , பி.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கி, நடமாட்டம் குறைந்த மற்றும் தனிமைப்படுத்தல் பேணப்படும் இந்த காலப்பகுதியில் நாடு முழுவதிலும் சௌகரியமான வங்கியியல் சேவைகளை வழங்கி வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. வங்கியின் பன்நாளிகை வாடிக்கையாளர் உதவி ஹொட்லைன் இலக்கங்கள், இணைய வசதி மற்றும் மொபைல் வங்கியியல் கட்டமைப்புகள் போன்றன தமது வசிப்பிடங்களிலுள்ள வாடிக்கையாளர்களின் பிரத்தியேகமான தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

உலகத் தொற்றுப் பரவல் நிலவும் காலப்பகுதி மற்றும் பொருளாதார உறுதியற்ற நிலை அதிகளவு காணப்படும் சூழலில் டிஜிட்டல் கட்டமைப்புக்கு மாறுபடலை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு, மீளமைக்கப்பட்ட தனது இணையத்தளத்தினூடாக வங்கியின் பலதரப்பட்ட வங்கிச் சேவைகள் ஒன்லைனில் வழங்க முன்வந்துள்ளது. இதில் ஒன்லைன் பண மாற்றங்கள் மற்றும் ஒன்லைன் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள் போன்றனவும் அடங்கியுள்ளன.  தடங்கல்களில்லாத வங்கியியல் மற்றும் நிதியியல் சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு தனது டிஜிட்டல் புத்தாக்கத்தை பெற்றுக் கொடுக்கும் வாக்குறுதியை வழங்கி, தற்போது முன்னெடுக்கப்படும் தேசிய முயற்சிகளுக்கு அவசியமான உதவிகளை வங்கி வழங்கும்.

இந்த நெருக்கடியான காலப்பகுதியில் வாடிக்கையாளர் தன்னிறைவு மற்றும் சௌகரியம் போன்றன தொடர்பில் செலான் வங்கி அதிகளவு கவனம் செலுத்தும். சுகாதார அதிகார அமைப்புகளால் வழங்கப்பட்ட கடுமையான சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அத்தியாவசிய சேவைகள் எனும் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களின் பிரகாரம் நாடு முழுவதையும் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட கிளைகள் திறந்திருக்கும். சகல ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சகல வாடிக்கையாளர்களையும் வங்கியின் டிஜிட்டல் வங்கியியல் சேவையை பயன்படுத்துமாறு ஊக்குவிப்பதுடன், இந்த ஆபத்தான சூழலில் அநாவசியமான வெளிப்படுத்தல்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .