2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

மொபைல், டிவி வராது?

S.Sekar   / 2021 ஜூலை 04 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில சொகுசு பாவனைப் பொருட்கள், இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் இதர அத்தியாவசியமற்றதாக கருதும் பொருட்களின் இறக்குமதியை பெருமளவு கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் தொலைபேசிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், இதர சில மின்சாதனப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் போன்ற பொருட்களின் இறக்குமதிக்கு இவ்வாறான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிந்துள்ளது. நாட்டிலிருந்து வெளிநாட்டு நாணயம் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.

அத்துடன் உள்நாட்டு உற்பத்திகளுக்கு சந்தையில் வாய்ப்புகளை வழங்கும் வகையிலும் இந்தக் கட்டுப்பாட்டை விதிக்க தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.

இந்தப் பொருட்கள் இறக்குமதியில் பெருமளவு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளதுடன், கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள நாட்டின் முன்னணி வர்த்தகங்களும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், இவ்வாறானதொரு கட்டுப்பாடு அல்லது தடை ஏற்படுமாயின், கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக ஏற்கனவே பின்னடைவை எதிர்நோக்கியுள்ள இந்த வியாபாரங்கள் மேலும் சரிவை எதிர்நோக்கும் என இந்த வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகன இறக்குமதியில் ஈடுபட்ட பலர், தற்போது சுமார் ஒன்றறை வருட காலமாக அமலிலுள்ள வாகன இறக்குமதித் தடை காரணமாக, வேறு வியாபாரங்களை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தியுள்ளனர். குறிப்பாக சில வாகன இறக்குமதியாளர்கள், முகங் கவசங்கள், கையுறைகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். சிலர் விவசாய உற்பத்திகளை விநியோகிக்கும் பணிகளை முன்னெடுக்கின்றனர். வாகன இறக்குமதித் தடை மேலும் தொடரும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .