2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

பத்து பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்களில் ஒன்றாக SLT-MOBITEL தெரிவு

S.Sekar   / 2021 ஜூலை 01 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் சிறந்த பத்து பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்களில் ஒன்றாக, SLT-MOBITEL தெரிவு செய்யப்பட்டுள்ளது. பிரான்ட் ஃபினான்ஸ் லங்கா அண்மையில் வெளியிட்டிருந்த வருடாந்த தரப்படுத்தலில் இவ்வாறு முதல் பத்து இடங்களில் SLT-MOBITEL தெரிவு செய்யப்பட்டிருந்தது.

ஒன்பதாம் இடத்தில் SLT-MOBITEL தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், முதல் பத்து ஸ்தானங்களினுள் புதிய வரவாகவும் அமைந்திருந்தது. வர்த்தக நாம மதிப்பிடல் மற்றும் தந்திரோபாய நிறுவனமான பிரான்ட் ஃபினான்ஸ் லங்காவினால் இலங்கையின் சிறந்த பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்களுக்கான 18 ஆவது வருடாந்த மீளாய்வின் பிரகாரம் இந்தத் தரப்படுத்தல் அமைந்திருந்தது.

இந்தத் தரப்படுத்தல் தொடர்பில் ஸ்ரீ லங்கா ரெலிகொம் குழுமத்தின் தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் முதல் பத்து மிகவும் பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்கள் வரிசையில் தெரிவு செய்யப்பட்டமையையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். அண்மையில் நாம் ஏற்படுத்தியிருந்த SLT-MOBITEL வர்த்தக நாம ஒன்றிணைப்பினூடாக, இலங்கையில் தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்குவதில் எம்மை ஒப்பற்ற தலைமை சேவை வழங்குநராக வாடிக்கையாளர்களுக்கு உறுதி செய்துள்ளதுடன், டிஜிட்டல் சேவைகளை வழங்குவதில் முன்னோடியாகவும் எம்மைத் திகழச் செய்துள்ளது. தொழில்நுட்ப அடிப்படையிலான பொருளாதாரத்தை ஏற்படுத்துவது மற்றும் தொழில்நுட்ப சார் சமூகத்தை உருவாக்குவது போன்ற அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு வலுச் சேர்ப்பதாக எமது வர்த்தக நாம ஒன்றிணைவு அமைந்திருப்பதுடன், எமது ஒன்றிணைந்த வர்த்தக நாமத்தினூடாக நம் நாட்டு மக்களுக்கு புத்தாக்கமான மற்றும் ஒப்பற்ற வாடிக்கையாளர்-மையப்படுத்திய சேவைகளையும் உலகத் தரம் வாய்ந்த டிஜிட்டல் அனுபவங்களையும் வழங்க முடிந்துள்ளது.” என்றார்.

இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியில், வாடிக்கையாளர்களின் தேவைகளின் பிரகாரம் உறுதியான, தங்கியிருக்கக்கூடிய மற்றும் தேவைகளை நிவர்த்தி செய்யும் வர்த்தக நாமமாக SLT-MOBITEL திகழ்கின்றது. தொற்றுப் பரவலுடனான காலப்பகுதியில் SLT-MOBITEL இனால் தொடர்ச்சியாக தடங்கல்களில்லாத சேவை வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டிருந்ததுடன், வாடிக்கையாளர்களின் பரந்தளவு தேவைகளுக்கு பொருத்தமான புத்தாக்கமான தொடர்பாடல் தீர்வுகள் வழங்கப்பட்டிருந்தன.

இலங்கையில் புதிய தலைமுறை தொலைத்தொடர்பாடல்களுக்கு வழிகோலியுள்ள SLT-MOBITEL இனால் சகல துறைகளிலும் டிஜிட்டல் மாற்றம் மற்றும் வலுவூட்டல் போன்றன துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சந்தை மற்றும் தொழில்நுட்ப ஆதிக்கத்தில் ஒப்பற்ற நிலையை உறுதி செய்யும் வகையில் இந்த ஒன்றிணைவு அமைந்துள்ளதுடன், தூர நோக்குடன் செயலாற்றி தொழில்நுட்பத்தினூடாக செயற்படுத்தப்படும் பொருளாதாரத்தையும், சமூகத்தையும் தயார்ப்படுத்தில், எதிர்காலத்தில் எழக்கூடிய டிஜிட்டல் சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கு தயார்ப்படுத்துவது இலக்காக அமைந்துள்ளது.

நுகர்வோர் செயற்பாடுகள் மற்றும் நிதியியல் அளவுகோல்களின் அடிப்படையில் துறையின் நியமங்களைப் பின்பற்றி மதிப்பீடுகளை பிரான்ட் ஃபினான்ஸ் மேற்கொள்கின்றது. நாட்டின் மொத்த சனத்தொகையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான துறைகளில் சந்தை ஆய்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .