2023 பெப்ரவரி 07, செவ்வாய்க்கிழமை

பைரஹாவில் பிசிஆர் சோதனை வசதி

S.Sekar   / 2022 நவம்பர் 21 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைரஹா ஃபாம்ஸ் பிஎல்சி நிறுவனம் தனது ஆய்வுகூடத்தில் நுண்ணுயிரியல் ஆய்வுகூடமொன்றையும் சேர்த்து தற்போது அதனை நவீனமயமாக்கியுள்ளது. இந்நிறுவனம் தனது தொழிற்சாலைகள், பண்ணைகள் மற்றும் குஞ்சு பொரிக்கும் மையங்கள் போன்ற பலவற்றில் சுத்தம் பேணும் தராதரங்களை மதிப்பீடு செய்து, உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், சர்வதேச மற்றும் உள்ளூர் தராதரங்களை உறுதிப்படுத்தும் வகையில் பதப்படுத்திய கோழி இறைச்சி மற்றும் கோழி இறைச்சியை மூலமாகக் கொண்ட உற்பத்திகளை இங்கு சோதனை செய்து வருகிறது.

பைரஹாவின் எலிஸா ஆய்வுகூடம் 1995 இல் ஸ்தாபிக்கப்பட்டதுடன், கோழி வளர்ப்பு மற்றும் வணிகரீதியான புரொயிலர் பறவைகளின் ஆரோக்கிய நிலைமையை கண்காணிக்கவும், மதிப்பிடவும் உதவுகிறது.

புதிதாக சேர்க்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் மூலம், நிறுவனத்தின் ஆய்வுகூடமானது எந்தவொரு கோழி வளர்ப்பு மற்றும் வணிகரீதியான புரொயிலர் குஞ்சுகள்ஃபறவைகளின் பண்ணையிலும், கோழி தொடர்பான நோய்த்தொற்றுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கும், சரியான நேரத்தில் அவற்றைச் சரிசெய்யும் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தேவையான கருவிகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும். உணவுப் பொருட்களின் பகுப்பாய்வில் நோய்க்கிருமி நுண்ணுயிரிகளைக் கண்டறிவதற்காகப் பயன்படுத்தப்படும் பிசிஆர் சோதனைகளைப் போலவே, எங்கள் தயாரிப்புக்களின் தரம் மற்றும் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த கோழி இறைச்சி மற்றும் இறைச்சி சார்ந்த உற்பத்திகளின் மாதிரிகளையும் நாம் தொடர்ந்து சோதிக்க முடியும்.

பைரஹாவின் எலிஸா மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வுகூடம் ஆகியன பிற கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அவற்றின் சேவைகளை வழங்குவதைப் போலவே, இந்த வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பறவைகள் கூட்டத்தின் ஆரோக்கிய நிலைமையை மேம்படுத்துவதற்கும், இந்த நிறுவனங்களின் கோழி இறைச்சி மற்றும் ஏனைய தயாரிப்புக்களின் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் அதன் பிசிஆர் சோதனை வசதிகளை வழங்கும்.

புதிய ஆய்வுகூடத்தின் அங்குரார்ப்பண விழாவில், பைரஹா ஃபாம்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான யாக்கூத் நளீம் அவர்கள் கூறுகையில், 'கோழிப்பண்ணை தொழிலில் ஏறக்குறைய 47 வருட அர்ப்பணிப்புடனான சேவையுடன், பைரஹா ஃபாம்ஸ் நிறுவனம் பல உள்ளூர் மற்றும் சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது. அத்துடன், 2022 ஆம் ஆண்டில் சுமார் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாயை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், இதன் பின்னணியில் அரசாங்கம் துரிதமாக செயல்பட்டால், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளின் அரசாங்கங்களுடன் உடன்படிக்கைகளை மேற்கொண்டு, அந்த நாடுகளுக்கு கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்து வருவாயை கணிசமாக அதிகரிக்க முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X