2023 ஜூன் 01, வியாழக்கிழமை

பவர் நிறுவனத்துக்கு SAP Dare to Dream விருதுகள் 2023 இல் விசேட கௌரவிப்பு

S.Sekar   / 2023 பெப்ரவரி 17 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட், அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Dare to Dream விருதுகள் 2023 இல், நிதிசார் மாற்றியமைப்புக்காக விசேட கௌரவிப்பு விருது வழங்கப்பட்டிருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வுக்கு SAP, ஜோன் கீல்ஸ் IT மற்றும் EY ஆகியன வலுவூட்டியிருந்ததன.

பவர் நிறுவனத்தினுள் பல்வேறு SAP தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை பின்பற்றியிருந்ததனூடாக, பதிவு செய்திருந்த புத்தாக்கம், துரித மாற்றம் மற்றும் வெற்றிகரமான செயற்பாடுகள் போன்றவற்றை கௌரவிக்கும் வகையில் SAP இன் விசேட கௌரவிப்புத் திட்டத்தின் அங்கமாக இந்த விருது அமைந்திருந்தது.

2021 ஆம் ஆண்டில், cloud deployment இல் SAP S/4 HANA 2020 க்கு பாரிய மாற்றத்தை பவர் ஏற்படுத்தியிருந்ததுடன், SAP Analytics Cloud Live reporting ஐயும் பின்பற்ற ஆரம்பித்திருந்தது. அக்கால கட்டத்தில் இலங்கையில் இந்த நவீன தொழில்நுட்ப கட்டமைப்பை பயன்படுத்த ஆரம்பித்த முதலாவது நிறுவனமாகவும் பவர் திகழந்தது. இந்த கட்டமைப்பு மாற்றத்தில், cloud migration, technical migration with integration platform conversion, S/4 HANA migration with business process re-engineering, adaptation of SAP Mobility Platform மற்றும் SAP Analytics Cloud பிரயோகம் போன்றன அடங்கியிருந்தன.

இதனூடாக RISE ABC திட்டத்தை ஆரம்பிக்க முடிந்திருந்ததுடன், மேலும் பவரின் SAP கட்டமைப்பு மற்றும் வியாபார செயன்முறைகளை ஒன்றிணைக்கும் வகையிலும் அமைந்திருந்தது. அத்துடன், நிறுவனத்தின் டிஜிட்டல் பிரசன்னத்தையும், ஒட்டு மொத்த பெறுமதியையும் தனது செயற்பாட்டு செயன்முறைகளை உரிய வேளையில் பிரயோகித்து, புத்தாக்கமான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க உதவியாக அமைந்துள்ளது.

தொற்றுப்பரவல் உச்சக்கட்டத்தில் காணப்பட்ட காலப்பகுதியில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், offline முறையில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியிருந்தது. இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பரந்துள்ள பங்காளர்கள் மத்தியில் கட்டம்-கட்டமாக செயற்படுத்த வேண்டியிருந்தது. பல்வேறு நெருக்கடிகள் காணப்பட்ட போதிலும், பவரினால் வெற்றிகரமாக இதர சகல வியாபாரச் சவால்களுக்கும் முகங்கொடுத்து, இந்த செயற்திட்ட காலப்பகுதியில், உரிய செலவு வரம்புகளுக்குள் வெற்றிகரமாக பூர்த்தி செய்ய முடிந்திருந்தது.

பவர் நிறுவனத்துக்கு இந்தத் திட்டத்தின் செயற்படுத்தல் என்பது பயனளிப்பதாக அமைந்திருந்தது. இதில் செயன்முறை எளிமைப்படுத்தல் மற்றும் தன்னியக்கமயப்படுத்தல்கள் மற்றும் டிஜிட்டல் முறையிலான கொள்முதல் செயன்முறை அடங்கலாக, கையிருப்புகள் முகாமைத்துவத்தில் சிறந்த செயன்முறைகளை பின்பற்றல், புதிய S/4 HANA நிதி மற்றும் கட்டுப்பாட்டு உள்ளம்சங்களுடன் ஏற்கனவே காணப்படும் நிதிச் செயன்முறைகளை மீளக் கட்டியெழுப்பல் போன்றன அடங்கியிருந்ததுடன், இவை அனைத்தும், நிறுவனத்தின் ஆற்றல் மற்றும் அதிகளவு கிடைப்பனவு, சிறந்த உற்பத்தித் திறன், பாதுகாப்பு மற்றும் நெறிமுறையை மேம்படுத்த உதவியிருந்தன.

S/4 HANA உடன் டிஜிட்டல் core ஐ நிறுவியிருந்ததுடன், இதில் உள்வைக்கப்பட்ட AI, ML ஆற்றல்கள், பரந்தளவு தீர்வுக் கட்டமைப்புகளால் வலுவூட்டல் போன்றன அடங்கியுள்ளன. IOT, RPA மற்றும் blockchain புரட்சிகரமான தொழில்நுட்ப அம்சங்களினால், பவருக்கு எதிர்காலத்தில் அவற்றை பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தது.

இலங்கையில் IBM நிறுவனத்தின் பிரவேசத்தைத் தொடர்ந்து, 1982 ஆம் ஆண்டில் டிஜிட்டல் யுகத்துக்கு மாறியிருந்த முதலாவது நிறுவனமாகவும் பவர் திகழ்கின்றது. அன்று முதல், தொடர்ச்சியாக தொழில்நுட்ப பரிணாம மாற்றங்களுக்கேற்ப தன்னையும் மாற்றியமைத்து வருவதுடன், சைபர் பாதுகாப்பு மற்றும் இடர் மீட்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதுடன், machine learning, artificial intelligence, IoT போன்றவற்றையும் பின்பற்றுகின்றது. விற்பனை செயலணி தன்னியக்கமயப்படுத்தலை நிறுவனம் ஆரம்பித்ததுடன், வழமையான நடமாடல், டேட்டா மற்றும் பகுப்பாய்வு போன்றவற்றுக்கு அப்பால் சென்று, பல்வேறு வியாபாரங்கள் மற்றும் விற்பனை நாளிகைகளை ஒன்றிணைக்கும் வகையில் அமைந்துள்ளது.           


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .