2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

புது முகவரியில் செலான் வங்கியின் கிளிநொச்சி கிளை

S.Sekar   / 2021 ஜூலை 03 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கியின் கிளிநொச்சி கிளை புதிய முகவரிக்கு இடம்மாற்றப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சிக்கல்களில்லாத உயர் தரம் வாய்ந்த வங்கியியல் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் நவீன வசதிகள் படைத்த கட்டிடத்துக்கு இந்தக் கிளை மாற்றப்பட்டுள்ளது. இப்புதிய கிளை இல. 155 மற்றும் 155/1, A-9 வீதி, கிளிநொச்சி எனும் முகவரியில் அமைந்துள்ளது.

செலான் வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்தளவு பிரத்தியேகமான சேவைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்தக் கிளை அமைந்துள்ளதுடன், உயர் சௌகரிய சேவைகளை உறுதி செய்வதாகவும் உள்ளது. புதிய இடம் மத்திய நிலையமாக அமைந்துள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு கிளையை மற்றும் ATM சேவைகளை இலகுவாக அணுகக்கூடிய வகையில் அமைந்துள்ளது. தினசரி மு.ப. 9 மணி முதல் பி.ப. 3 மணி வரை இந்தக் கிளை திறந்திருக்கும்.

தினசரி செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது சுகாதார அதிகார அமைப்புகளால் வழங்கப்பட்டுள்ள சகல விதிமுறைகளையும் செலான் வங்கி பின்பற்றுவதுடன், இந்த தொற்றுப் பரவலுடனான சூழலில் அனைவரையும் அவசியமான முற்காப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவித்துள்ளது. தமது தினசரி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு, செலான் வங்கியின் டிஜிட்டல் கட்டமைப்புகளை பயன்படுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .