Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 மார்ச் 30 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கி லங்காபே ஒத்துழைப்புடன் சர்வதேச ஏற்றுக் கொள்ளலுடன் கூடிய டெபிட் மற்றும் கிரடிட் கார்ட்டுகளின் அறிமுகம் மூலம் இலங்கை கொடுப்பனவு கார்ட்டுகளின் இணையவழி களம் பாரியதோர் நகர்வை மேற்கொண்டுள்ளது
இந்த தேசிய கார்ட் திட்டமானது, ஜப்பானை தளமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச கார்ட் திட்டமான JCB இன்டர்நேஷலின் பங்குடைமையோடு லங்காபே அறிமுகம்
செய்துள்ள ஒரு முன்னோடி திட்டமாகும். JCB 150 மில்லியனுக்கும் அதிகமான கார்ட் உரிமையாளர்களைக் கொண்டுள்ளது.
இலங்கையில் லங்காபே கிரெடிட் கார்டுகளின் முதல் அறிமுகம் இதுவாகும்.
இலங்கையின் வங்கியொன்றினால் லங்காபே கார்டுகளின் ஐந்து வகைகள் – மூன்று கிரெடிட் கார்டுகள் மற்றும் இரண்டு டெபிட் கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டதும் இதுவே முதல் முறையாகும்.
லங்காபே கார்ட்டுகள் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கார்ட்டுகளாகும். இதுசெலவு கட்டுப்படியானது. புதிய தொழில்நுட்பங்களையும்அதிஉயர் பாதுகாப்பு
பண்புகளையும் உள்ளடக்கியது. லங்காபே கார்ட் மூலமான சகல உள்ளுர்
பணப்பரிமாற்றங்களும்உள்ளுர் மட்டத்திலும் வெளிநாடுகளில் பாவிக்கப்படுகின்ற போது JCB சர்வதேச வலையமைப்பின் மூலமும் மேற்கொள்ளப்படும். உள்ளுர் கார்ட் பரிமாற்றத்தின் போது வெளிநாட்டு நாணயமாற்று சம்பந்தப்படாது என்பதையும் இது உறுதி செய்கின்றது. இதன் மூலம் நாட்டுக்கு கணிசமான அளவு வெளிநாட்டுநாணயமாற்றை சேமிக்க முடியும் என்றும் வங்கி அறிவித்துள்ளது.
இலங்கையில் JCB கார்ட்டுகளின் விநியோகம் கொழும்பில் JCB, கொமர்ஷல் வங்கி லங்காபே என்பனவற்றின் சிரேஷ்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கொமர்ஷல் வங்கி கார்ட் வைத்திருப்போருக்கு புதிய கார்டடுக்கான தெரிவு, பெறுமதி சேர் சேவைகள் என்பன ஆராயப்பட்டன.
கொமர்ஷல் வங்கி இலங்கையில் வழங்கும் லங்காபே கார்ட்டுகள் இரட்டை இடைமுக செயற்பாடுகளைக் கொண்டுள்ளது. தொடுகை மற்றும் தொடுகை அற்ற இரு பண்புகளை
அது கொண்டுள்ளது. லங்காபே கொடுப்பனவு வலையமைப்பு முறையோடு தொடர்புடைய விற்பனை புள்ளி நிலையங்களில் இவ்விரு வகையான செயற்பாடுகளுக்கும் அது வழியமைக்கின்றது. லங்காபே உடன் தொடர்புடைய எல்லா தன்னியக்க பணப்பரிமாற்றஇயந்திரங்களிலும் (ATM) மற்றும் நாடு முழுவதும் உள்ள 42,000 வணிக புள்ளிகளிலும் இதை பயன்படுத்த முடியும். தற்போது 41 மில்லியனுக்கும் அதிகமான ஏற்பு நிலையங்களைக் கொண்டுள்ள JCB இன் உலகளாவிய வலையமைப்புக்குள்ளும் இதைப் பயன்படுத்த முடியும். வங்கி JCB லங்காபே கிரடிட் கார்ட்டுகளை பிளேடினம் கோல்ட், கிளசிக் ஆகிய வகைப்படுத்தலின் கீழ் விநியோகிக்கும். டெபிட் கார்ட்டுகளை பிளேட்டினம் மற்றும் கிளசிக் வகைப்படுத்தலின் கீழ் வழங்கும். இந்த டெபிட் கார்ட் நாட்டின்
முதலாவது இரட்டை இடைமுக செயற்பாடு கொண்ட டெபிட் கார்ட்டாகும்.
வாடிக்கையாளர் தொடுகை அல்லது தொடுகை அற்ற விதத்தில் உரிய விற்பனைப்புள்ளிகளில் இதைப் பயன்படுத்த முடியும்.
கொமர்ஷல் வங்கி – லங்காபே JCB கார்ட்டுகளின் அறிமுக விழாவில் உரையாற்றிய கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க “தேசிய கார்ட் திட்டத்தின் கீழ் உள்ளுரிலும்
வெளிநாடுகளிலும் ஏற்புடைய முதலாவது டெபிட் மற்றும் கிரடிட் கார்ட்டுகளை வழங்கும் முதலாவது வங்கி என்ற வகையில் நாம் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். அதேபோல் முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் வாயந்துள்ள ஒரு விடயத்துக்கு ஆதரவு வழங்குவதிலும் நாம் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம். கொமர்ஷல் வங்கி பல வருடங்களாக JCB உடன் இணைந்துள்ளது மற்றும் தேசிய அட்டைத் திட்டத்தின் கீழ்
லங்காபே அட்டைகள் மற்றும் JCB அட்டைகள் இரண்டையும் பெற்ற இலங்கையின் முதல் வங்கிகளில் ஒன்றாகும். JCB அட்டைகள் கடந்த நான்கு வருடங்களாக எமது ATM இயந்திரங்களில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இந்த பங்குடைமையானது JCB உடனான எமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் இக்கட்டான ஒரு கால கட்டத்தில் எமது தேசிய பொருளாதாரத்துக்கும் அது ஆதரவளிக்கும் என்றும் நாம் நம்புகின்றோம்” என்று கூறினார்.
இந்த வைபவத்தில் உரையாற்றிய லங்காபே இன் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சன்ன டி சில்வா “இலங்கையில் கொமர்ஷல் வங்கி –லங்காபே கார்ட்டுகளின் அறிமுகம் இலங்கையர்களை துரிதமாகவும ;, வசதியாகவும், பாதுகாப்பாகவும் அவர்களால் ஈடுகொடுக்கும் வகையிலும் கொடுப்பனவு தீர்வுகளை நோக்கி அழைத்துச் செல்வதில் ஒரு முக்கியமான பாரிய நகர்வாகும். இலங்கையின் தேசிய கொடுப்பனவு உட்கட்டமைப்பில் மிகச் சிறந்த தீர்வுகளைக் கொண்டு வருவதிலும் நாட்டின் வங்கித்துறை மற்றும் நிதிச் சேவை பிரிவுகளில் புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் வசதிகள் என்பனவற்றின் அடிப்படையில் புரட்சிகரமான மாற்றங்களை முன் வைப்பதிலும் லங்காபே திடசங்கற்பம் பூண்டுள்ளது.
லங்காபே கிரடிட் மற்றும் டெபிட் கார்ட்களை வழங்குவதில் எம்மோடு கைகோர்த்துள்ள முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி
அமைந்துள்ளமை எமக்கு பெரு மகிழ்ச்சியை அளிக்கின்றது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இவ்விடயத்துக்கு புதிய உத்வேகத்தை இது வழங்கும் என்பதில்எவ்வித சந்தேகமும் இல்லை” என்று கூறினார்.
இந்த வைபவத்தில் JCB இன் பிரதிநிதியாகப் பங்கேற்ற அதன் நிறைவேற்று உப
தலைவர் கோயா சகுமா “JCB கடந்த 50 வருடங்களாக ஜப்பானின் முன்னணி கிரடிட் கார்ட் கம்பனியாகவும், கடந்த 30 வருடங்களாக உலகளாவிய கொடுப்பனவு கம்பனியாகவும் உள்ளது. எமது பங்காளிகளுக்கும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கும் நாம் இணையற்ற சேவைகளை வழங்கி வருகின்றோம். எமது பங்காளிகளுடனான எமது
நெகிழ்வுப் போக்குள்ள அணுகுமுறை எதிர்ப்பார்ப்புக்களை தாண்டிச் செல்ல வைக்கின்றது.
அதன் பலனாக வாடிக்கையாளர்கள் தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். லங்காபே உடன் கூட்டுசேர்ந்து தேசிய அட்டைத் திட்டத்தின் கீழ் முதன்முதலில் லங்காபே கிரெடிட் கார்டை வழங்குவதற்கு கொமர்ஷல் வங்கியுடன் இணைந்த்தில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த மகத்தான முயற்சியில் பங்குதாரராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம் ” என்று கூறினார்.
இலங்கையின் முதல் 100மூ கார்பன் பாவனையினை குறைத்த வங்கி, உலகின்
தலைசிறந்த 1000 வங்கிகளில் தொடர்ந்தும் 12 வருடங்களாக பட்டியலிடப்பட்ட
ஒரேயொரு இலங்கை வங்கி, கொமர்ஷல் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி
வலையமைப்பினைக் கொண்ட 270 கிளைகள் மற்றும் 950 தானியங்கி இயந்திரங்களை கொண்டு இயங்குகின்றது. கொமர் ஷல் வங்கி இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறைக்கு பாரிய கடனுதவி வழங்குவதோடு நாட்டின் வங்கித் துறையில் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது.
வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பங்களாதேஷை உள்ளடக்கியது, அங்கு வங்கி 20 கிளைகளை இயக்குகின்றது: மியன்மார் நய் பியி தாவில் நுண்நிதி நிறுவனத்தினை கொண்டுள்ளது.
படவிளக்கம ;:
கொமர்ஷல் வங ;கி-லங்காபே-JCB கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் அறிமுக விழாவில்
பிரமுகர்கள ; (இடமிருந்து) திரு கோயா சகுமா - JCB இன்டர்நேஷனலின் நிறைவேற்றுதுணைத் தலைவர், திரு கென்னத் சில்வா - லங்காபேயின் தலைவர், பேராசிரியர் ஆனந்த ஜயவர்தன - கொமர்ஷல் வங்கியின் தலைவர், திரு. சனத் மனதுங்க – கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர்ஃபிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் திரு சன்ன
டி சில்வா - லங்காபேயின் பொது முகாமையாளர் ஃபிரதம நிறைவேற்று அதிகாரி.
34 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
4 hours ago