2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

ரஞ்சன் எம்.பிக்கு கிடைத்த தண்டனைகள் அதிகம்

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 22 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் அதிகம் என்பது தனது தனிப்பட்ட கருத்து என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதாவது ரஞ்சன் ராமநாயக்க செய்த குற்றத்துக்காக அவருக்கு, சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அத்துடன், 1,50,000 மக்கள் அவருக்கு வாக்களித்து, மக்கள் பிரதிநிதியாக செய்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இது நபர் ஒருவருக்கு கிடைக்க கூடிய மிகப்பெரிய தண்டனையாகும்.

எனவே அவருக்கு இத்தண்டனைகள் இரண்டும் அதிகம் என தான் உணர்வதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X