S.Sekar / 2021 ஜூலை 03 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சில மேற்குலக நாடுகளைத் தவிர்த்து, சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்த ஆண்டிலும் சரிவை பதிவு செய்யும் என்பதுடன், இதன் காரணமாக 2.4 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்படும் என ஐக்க நாடுகள் முன்னெடுத்திருந்த ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், 2023 ஆம் ஆண்டு வரை இந்தத் துறை மீட்சியை பதிவு செய்யாது எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பல நாடுகளின் வாழ்வாதாரமாக அமைந்துள்ள இந்தத் துறைக்கு, வெளிநாட்டு சுற்றுலா மீட்சியில் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றல் மற்றும் சான்றிதழ்கள் போன்றன முக்கியத்துவம் பெறுகின்றன.
2019 ஆம் ஆண்டின் முன்னர் நிலவிய தொற்றுப் பரவலுக்கு முன்னரான சூழலுடன் ஒப்பிடுகையில், 2020 ஆம் ஆண்டில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் விஜயம் 73 சதவீதத்தால் வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது. இதனூடாக, சுற்றுலாத் துறைசார்ந்த பிரிவுகளில் 2.4 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பாக பதிவு செய்திருந்ததாக ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா நிறுவனம் (UNWTO) மற்றும் UNCTAD ஆகியன அறிக்கையிட்டிருந்தன.
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களும் மோசமானதாக அமைந்துள்ளன. குறிப்பாக பெருமளவு பிரயாணங்கள் இடம்பெறவில்லை. ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் ஓரளவு மீட்சி ஏற்படும் எனும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஓரளவு மீட்சி பதிவாகலாம் என UNCTAD இன் ஆய்வாளரான ராஃல்வ் பீற்றர்ஸ் குறிப்பிட்டார்.
தற்போது நிலவும் சூழ்நிலை சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் நிலவியதை ஒத்ததாக அமைந்துள்ளது. பல வாழ்வாதாரங்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. நீண்ட கால அடிப்படையில் எமது எதிர்பார்ப்பு யாதெனில், 2023 ஆம் ஆண்டின் பின்னரே, 2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட எண்ணிக்கையை பதிவு செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம். இந்த மீட்சி என்பது பிராந்தியத்துக்கு பிராந்தியம், நாட்டுக்கு நாடு வேறுபடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று முதல் (01) ஐரோப்பிய ஒன்றியத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் கொவிட்-19 சான்றிதழ் என்பது, பிராந்திய ஒருமைப்பாட்டை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது ஆசிய பசுபிக் பிராந்தியம் அதிகளவு மூடப்பட்ட பகுதியாக அமைந்துள்ளது. இப்பிராந்தியத்தைச் சேர்ந்த பல நாடுகள் முழுமையாக அல்லது பல கட்டுப்பாடுகளுடன் மூடப்பட்டுள்ளன என்றார்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025