2021 செப்டெம்பர் 25, சனிக்கிழமை

எடிசலாட் - hSenid நடத்திய Appzone போட்டியில் வெற்றியீட்டியோருக்கு பரிசில்கள்

Super User   / 2011 மார்ச் 28 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எடிசலாட் மற்றும் hSenid நிறுவனங்கள் இணைந்து பல்கலைக்கழக மட்டத்தில் நடத்தியிருந்த Appzone  எனும் செல்லிடத்தொலைபேசிகளுக்கான மென்பொருள் வடிவமைப்பு போட்டித்தொடரில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.

இந்த போட்டிகள் கடந்த செப்டெம்பர் மாதம் எடிசலாட் மற்றும் hSenid நிறுவனங்களால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலங்கையில் முதற்தடவையாக செல்லிடத்தொலைபேசிகளுக்கான ஆப்ளிகேஷன்களை வடிவமைத்து வருமானத்தை ஈட்டிக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் பாவனையாளர்களுக்கு ஆப்ளிகேசன்களை பயன்படுத்தவும் தெரிவு செய்துக்கொள்ளவதும் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் தாம் வடிவமைத்த ஆப்ளிகேஷன்களை பரிசோதனை செய்து விற்பனை செய்து அதன் மூலம் வருமானத்தை பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது, எடிசலாட் மற்றும் hSenid நிறுவனங்களின் குழுக்கள் முன்னணி பல்கலைக்கழகங்களில் பயிற்சிப்பட்டறைகளை நடத்தியிருந்தன. இதன் மூலம் செய்முறை தொடர்பான விளக்கங்களும், ஆலோசனைகளும் மென்பொருள் வடிவமைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.

இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செல்லிடத்தொலைபேசி மென்பொருள் வடிவமைப்பு போட்டித்தொடரில் பல்கலைக்கழக மட்டத்தில் வெற்றிபெற்ற மூன்று வெற்றியாளர்களுக்கு கவர்ச்சிகரமான பணப்பரிசுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறு ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலிருந்தும் தெரிவாகிய வெற்றியாளர்கள் அகில இலங்கை ரீதியாக நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்த இறுதிப் போட்டியில் வெற்றிபெற்றவருக்கு அப்பிள் ஐ-பொட் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் வெற்றியாளர்களுக்கு கேடயங்களும், சான்றிதழ்களும் பரிசாக வழங்கப்பட்டிருந்தன.

 பல்கலைக்கழங்களுக்கிடையிலான இந்த திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த திட்டம் பொதுத் துறையினருக்கும் விஸ்தரிப்பு செய்யப்பட்டிருந்தது. றறற.யிpணழநெ.டம எனும் இணையத்தளத்தின் மூலம் மென்பொருள் வடிவமைப்புக்குத் தேவையான அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்ள வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. சிறந்த ஆக்கங்களை வடிவமைத்து சமர்ப்பிக்கும் 5 வடிவமைப்பாளர்களுக்கு வெற்றிக் கேடயங்களும், சான்றிதழ்களும் பிளாக்பெரி தொலைபேசிகளும் வழங்கப்படவுள்ளன.
பல்கலைக்கழகங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டித்தொடரில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கலுக்கான தெரிவு, குறிப்பிட்ட காலப்பகுதியில் வடிவமைப்பாளர்கள் ஈட்டிய வருமானத்தின் அடிப்படையில் இடம்பெற்றிருந்தது.

எடிசலாட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி துமிந்திர ரட்நாயக்க கருத்து தெரிவிக்கையில், 'இளம் வயதினரிடையே இலை மறை காயாக மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொணரும் வகையில் அமைந்துள்ள இந்த திட்டத்துக்கு பெருமளவான பல்கலைக்கழக மாணவர்கள் பங்களிப்பு வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. எடிசலாட் மூலம் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமையை இட்டு நாம் பெருமையடைகிறோம்' என்றார்.

hSenid மொபைல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தினேஷ் சப்ரமாது கருத்து தெரிவிக்கையில், 'பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாத்திரமன்றி, பொதுத்துறையினருக்கும் பெருமளவு வருமானம் ஈட்டிக்கொள்ளக்கூடிய வாய்ப்பை இந்த திட்டம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது' என்றார்.  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .