2023 ஜூன் 01, வியாழக்கிழமை

AIA இன்ஷுரன்ஸ் வெல்த் பிளானர்கள் IQA வினால் கௌரவிப்பு

Johnsan Bastiampillai   / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச தர விருதுகள் (IQA) 2019 க்குத் தகுதி பெற்றதன் மிகச்சிறந்த சாதனைக்காக 12 வெல்த் பிளானர்களை AIA இன்ஷுரன்ஸ் கௌரவித்தது. வியாபாரத்தின் தரம் மற்றும் விற்பனையின் அளவு ஆகியவற்றின் ஊடாக நிறுவனத்தினுடைய வெற்றிக்குப் பாரிய பங்களிப்புச் செய்யும் முகவர்களை IQA ஊக்குவித்து வெகுமதியளிக்கின்றது. இவ்விருதானது லிம்ரா (LIMRA) டலென்ட் சொலுசன்ஸ் இன்டர்நஷனல் நிறுவனத்தினால் வழங்கப்பட்டிருந்தது.  

IQA விருதை வெற்றி பெற்றதற்காக, கொழும்புப் பிராந்தியத்தைச் சேர்ந்த P.H ரசிக சன்தகெளும், H ரங்கிக லசந்தி - கொழும்புப் பிரதான பிராந்தியம், K.D சுரங்க பெரேரா - நீர்கொழும்புப் பிராந்தியம் 01.மஹரகம பிராந்தியத்தைச் சேர்ந்த M சரத் ஜெயலால், கொழும்புப் பிரதான பிராந்தியத்தின் T மாலதி ஹேரத், U.A.M சஞ்ஜீவனி சோமரத்ன - கண்டிப் பிராந்தியம், ராகம நகரப் பிராந்தியத்தைச் சேர்ந்த D.N ஹிமாலி பெரேரா, D ருக்லந்தி குணசேகர - ஹோமாகமப் பிராந்தியம், S ராமநாயக்க - நுகேகொடப் பிராந்தியம், H.M.B.G சசீகா ஹேரத் - கேகாலைப் பிராந்தியம் 02, நுகேகொடப் பிராந்தியத்தைச் சேர்ந்த K.C.N பெர்டிணான்டோ, மற்றும் கொழும்புப் பிராந்தியம் 01 ஐச் சேர்ந்த A.H.O.D ஜயவீர ஆகியோரை AIA பாராட்டிக் கௌரவித்திருந்தது.   

உற்பத்தி மட்டங்கள் மற்றும் நிலைபேறு தன்மையின் வீதங்கள் ஆகிய இரண்டினதும் அடிப்படையில் தகுதியாளர்களின் செயற்றிறன் மதிப்பிடப்பட்டிருந்தது. இரண்டு தொடர்ச்சியான வருடங்களில் எழுதப்பட்ட குறைந்தபட்ச 30 காப்புறுதிகளின் தயாரிப்பு, தனிநபர் ஆயுளின் குறைந்தபட்ச 90சதவீதத்தின் 13 மாத கால நிலைபேறு தன்மை வீதம் மற்றும் காப்புறுதி வருடமொன்றின் போது விநியோகிக்கப்பட்ட மற்றும் செலுத்தப்பட்ட தனிநபர் ஓய்வூதிய (வருடாந்த) வியாபாரம் ஆகிவற்றின் அடிப்படையில் சர்வதேச தர விருதிற்கான தகைமை விதிமுறைகள் அமைந்திருந்தன.

IQA ஆனது ஆயுள் காப்புறுதித் துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதொன்றாகவும் மற்றும் தொழில் நிபுணத்துவம், திறன் மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றின் அளவீடாகவும் அங்கிகரிக்கப்படுகின்றது. தகுதியாளர்கள் இதன்போது சர்வதேச மற்றும் உள்நாட்டு அங்கிகாரம் இரண்டையும் பெறுவதோடு, தற்போதைய வாடிக்கையாளர்கள் மற்றும் எதிர்காலத்தில் சாத்தியமான வாடிக்கையாளர்களுக்கு தங்களுடைய தொழில் நிபுணத்துவச் சான்றுகளை செயல் விளக்குவதற்காகவும் இதனை அவர்கள் பயன்படுத்த முடியும்.  

AIA இன் பிரதான நிறைவேற்று அதிகாரி நிகில் அத்வானி இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், ‘உலகளாவிய IQA அங்கிகாரத்திதை எங்களுடைய 12 வெல்த் பிளேனர்கள் எய்தியிருப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். மிகவும் தரம் வாய்ந்த வியாபாரப் பராமரிப்புக்காகவும் மற்றும் அதிசிறந்த வாடிக்கையாளர் சேவையுடன் உரிய தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ச்சியாக வழங்கியிருந்த எங்கள் வெல்த் பிளேனர்களின் மிகச்சிறந்த செயற்றிறனை லிம்ரா IQA கௌரவிக்கின்றது. இந்த விருதைப் பெற்ற வெற்றியாளர்கள் போன்ற வெல்த் பிளேனர்கள்தான் இலங்கையின் மிகச்சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக AIA இனை மாற்றியிருந்தனர்’ எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .