2023 ஜூன் 07, புதன்கிழமை

CICRA Campus இனால் Melbourne Polytechnic Bachelor of Business Pathway Programme கற்கைநெறி

S.Sekar   / 2023 பெப்ரவரி 13 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

CICRA Campus, இலங்கையில் வணிக இளங்கலை கற்கைநெறியை (Bachelor of Business) வழங்க, அவுஸ்திரேலியாவின் தொழில்நுட்ப மற்றும் உயர்கல்வி (TAFE) வழங்குனர்களில் ஒன்றான Melbourne Polytechnic உடன் கைகோர்த்துள்ளது. அதன்படி, CICRA Campus ஆனது Melbourne Polytechnic இன் சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடலுக்கான முழுமையான அங்கீகாரம் பெற்ற Certificate IV ஐ இலங்கையில் தனித்த கற்கைநெறியாக அமையும் வகையில், சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் டிப்ளோமாவை இலங்கையில் வழங்கும்.

மேற்குறிப்பிட்ட கூட்டாண்மைக்கு AusEduco Melbourne அனுசரணையளிக்கிறது. 

“சா/த பெறுபேறுகளைக் கொண்டுள்ள மாணவர்கள் இப்போது CICRA Campus இல் Pathway Programme கற்கைநெறியை பூர்த்தி செய்ய முடியும் என்பதுடன், அவுஸ்திரேலியாவில் உள்ள Melbourne Polytechnic இல் Bachelor of Business 2 ஆம் வருட கற்கைக்கான நேரடி நுழைவைப் பெற முடியும்,' என்று CICRA Campus இன் குழும பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான போஷன் தயாரத்ன கூறினார்.

“Bachelor of Business pathway கற்கைநெறியானது, அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு அவர்களது நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துவதுடன், இலங்கையில் தொழில் முன்னேற்றத்திற்கான தொழில்சார் நன்மைகளையும் வழங்குகிறது,' என்று தயாரத்ன தொடர்ந்தும் கூறினார்.

Bachelor of Business pathway programme ஆனது சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடலில் ஒரு சான்றிதழ் நிலை மற்றும் டிப்ளோமா நிலை கற்கையைக் கொண்டுள்ளதுடன், இது துரிதப்படுத்தப்பட்ட கற்கைமுறையில் ஒரு வருட காலத்திற்குள் பூர்த்தி செய்யலாம். சான்றிதழ் மற்றும் டிப்ளோமா ஆகிய இரண்டும் அவுஸ்திரேலிய தகைமைக் கட்டமைப்பின் கீழ் முழுமையான அங்கீகாரம் பெற்றவை.

CICRA Campus இல் pathway programme கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்கள், சர்வதேச மாணவர் விண்ணப்பதாரர்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விசா மற்றும் நிதியியல் தகைமை நிபந்தனைகளுக்கு அமைவாக Melbourne Polytechnic இல் கற்பதற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் தற்போதைய அவுஸ்திரேலிய குடிவரவு விதிமுறைகளுக்கு அமைவாக, இரண்டு வருட கால பட்டப்படிப்பை பூர்த்தி செய்கின்ற மாணவர்கள், படிப்பிற்கு பின்னர் மூன்று வருட வீசாவை பெற்றுக்கொள்வதுடன், அவுஸ்திரேலிய குடியுரிமையைப் பெற்றுக்கொள்ள இது வழிவகுக்கும்.

“CICRA Campus உடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இலங்கை மாணவர்கள் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கவும், தொழில் சம்பந்தமான தகைமையைப் பெறவும் அவர்களின் கனவுகளை முன்னெடுக்க உதவுவதற்கு ஆவலாக உள்ளோம்,' என்று Melbourne Polytechnic இன் பிரதம நிறைவேற்று அதிகாரியான பிரான்சிஸ் கொப்போலிலோ தெரிவித்தார்.

CICRA Campus உடனான உடன்படிக்கையைச் கைச்சாத்திடும் நிகழ்வில் உரையாற்றிய சர்வதேச அபிவிருத்திக்கான துணைத் தலைவரான டிம் கில்பேர்ட், Melbourne Polytechnic ஆனது இலங்கை மாணவர்கள் அவுஸ்திரேலியாவில் அவர்களின் கனவுகளை அடைவதற்கு வழிகோலுவதிலும் அவர்களின் இலங்கைத் தொடர்புகளுக்கு மதிப்பளிப்பதிலும்; நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

Melbourne Polytechnic ஆனது 1912 ஆம் ஆண்டு முதல் தொழில் பயிற்சியை வழங்கி வருவதுடன், அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள மிகப்பெரிய தொழில் பயற்சிய வழங்குநர்களில் ஒன்றாகும். 2014 ஒக்டோபரில், இந்த கல்வி நிறுவனத்திற்கு அதன் தற்போதைய பெயர் சூட்டப்பட்டதுடன், விக்டோரியா அரசாங்கத்தின் 19 மில்லியன் டொலர் மானிய உதவியையும் பெற்றுக்கொண்டது.

Melbourne Polytechnic ஆனது தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கட்டுப்பாட்டு அதிகார சபையான Australian Skills Quality Authority (ASQA) இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அவுஸ்திரேலியாவின் Tertiary Education Quality and Standards Agency (TEQSA) இல் உயர் கல்வி வழங்குனராகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, National Vocational education and training Regulatory (NVR) இல் பதிவுசெய்யப்பட்ட பயிற்சி நிறுவனமாகும் (Registered Training organization - RTO).

இது 300 க்கும் மேற்பட்ட தேசிய அங்கீகாரம் பெற்ற தகைமைகள் மற்றும் 400 க்கும் மேற்பட்ட கல்விமைய அங்கீகாரம் பெற்ற கற்கைநெறிகளை வழங்குவதற்கு அங்கீகாரம் பெற்றது. இந்த கற்கைத்திட்டங்களில் முன்-பயிலுநர் பயிற்சிகள், பயிற்சி, சான்றிதழ்கள், டிப்ளோமாக்கள், மேம்பட்ட டிப்ளோமாக்கள், இணைப் பட்டங்கள், இளங்கலை பட்டங்கள் மற்றும் முதுகலை பட்டங்கள் ஆகியவை அடங்கும்.

Melbourne Polytechnic தனது கற்கைத் திட்டங்களை ஏழு வளாகங்கள் மற்றும் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் மெல்பேர்ன் மாநகரிலுள்ள மேலதிக விசேட பயிற்சி மையங்களில் வழங்கி வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .