Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை
S.Sekar / 2023 மார்ச் 17 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச மகளிர் தினத்தை குறிக்கும் வகையில், Ex-Pack Corrugated Cartons PLC இனால், தமது களனி தொழிற்சாலை வளாகத்தில் விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உளவியல் நலனின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், தனது 300 வலிமையான ஊழியர்களுக்கு தமது பரந்த DEI கொள்கைகளின் பிரகாரம் இயங்கக்கூடிய சூழல் எவ்வாறு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பற்றி விளக்கமளிக்கும் வகையிலும் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
உளவியல் நோய் நிலைகளுக்கு ஆண்களை விட பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக பல்வேறு சர்வதேச ஆய்வுகளினூடாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த அமர்வின் போது, பெண் ஊழியர்களின் சாதனைகள் மற்றும் வாழ்க்கைக் கதைகள் கௌரவிக்கப்பட்டிருந்ததுடன், பெண்களின் பதவி நிலைகள், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பில் நாம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை மாற்ற வேண்டியதன் அவசியம் அடங்கலாக பல்வேறு இதர தாக்கம் செலுத்தும் காரணிகள், விழிப்புணர்வூட்டும் குறிப்புகள், மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் போன்ற பல அம்சங்களும் பகிரப்பட்டிருந்தன. நலனில் தாக்கம் செலுத்தும் உணர்வுபூர்வமான மற்றும் சமூக அம்சங்கள் பற்றியும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
#EmbraceEquity என்பதாக இந்த ஆண்டின் தொனிப்பொருள் அமைந்திருந்ததுடன், பாரம்பரியமாக ஆண்களினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வரும் தொழிற்துறையில், பாலின சமத்துவத்தைப் பின்பற்றி இயங்குவதானது Ex-Pack ஐப் பொறுத்தமட்டில் புதிய விடயமல்ல. இலங்கையின் முன்னணி அலைவுநெளிவுள்ள பொதிகள் உற்பத்தியாளராகத் திகழ்வதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு பொதியிடல் தீர்வுகளை வழங்கும் நிறுவனமாகவும், அபர்தீன் ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிடெட்டின் துணை நிறுவனமாகவும் Ex-Pack திகழ்கின்றது. இந்நிறுவனம் பெருமளவு பெண்கள் பங்கேற்பை அதிகம் ஊக்குவிக்கின்றது.
Ex-Pack Corrugated Cartons PLC முகாமைத்துவ பணிப்பாளர் சுல்பிகர் கௌஸ் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த ஆண்டின் தொனிப்பொருளாக #EmbraceEquity என்பது பின்பற்றப்பட்டிருந்த நிலையில், எமது துறையில் தூதுவர்களாகவும், முன்மாதிரியானவர்களாகவும் திகழ்வதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். வெறும் சம வாய்ப்புகள் என்பதற்கு அப்பால் சென்று, அனைவருடனும் கைகோர்த்து, திறமையான பெண்களுக்கு அவசியமான சகல வளங்களும் கிடைக்கச் செய்வதை உறுதி செய்வதுடன், தொழில்நிலையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் வெற்றிகரமாக இயங்குவதற்கு அவசியமான ஆதரவை வழங்குவதையும் உறுதி செய்கின்றோம்.” என்றார்.
நீண்ட காலமாக சமத்துவமான தொழில் வாய்ப்புகளை வழங்கும் நிறுவனமாக Ex-Pack கருதப்படுவதுடன், ஆண் மற்றும் பெண் இருபாலாருக்கும் சமமான முறையில் மதிப்பளிக்கப்பட்டு, வெகுமதியளிக்கப்பட்டு மற்றும் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சகல ஊழியர்களுக்கும் திறந்த-கதவுக் கொள்கையை (open-door policy) நிறுவனம் கொண்டுள்ளது. பெண்களுக்கான வலுவூட்டல் என்பது உயர் முகாமைத்துவத்திலிருந்து நேரடியாக வருவதுடன், நிறுவனத்துக்கும் ஒட்டு மொத்த பொருளாதாரத்துக்கும் பெண்களும், அவர்களின் வலிமைகளும் முக்கியமானவையாக அமைந்திருப்பதை ஏற்றுக் கொண்டுள்ளது.
பாலினசார் பக்கசார்பு மற்றும் பாகுபாடு போன்றவற்றுக்கெதிராக பூஜ்ஜிய-சகிப்பு (zero-tolerance) நிலைக்கு தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படுத்தப்படும் களங்கம் தொடர்பிலும் கவனம் செலுத்துகின்றது. பெண்களின் வாழ்க்கையில் இவ்வாறான நடத்தைகளினால் ஏற்படக்கூடிய நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடிய பாதிப்புகளை புரிந்து கொண்டு இவ்வாறான உயர்ந்த பண்புகளைக் கொண்ட செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. நிறுவனம் பரந்தளவு மற்றும் உள்ளடக்கமான பணியிடச் சூழலைக் கொண்டுள்ளதாக நிறுவனம் அதிகளவில் பாராட்டுதல்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், மதம், இனம், வயது, பாலினம், நம்பிக்கைகள் போன்ற எவ்விதமான பாகுபாடுமின்றி ஒவ்வொரு தனிநபர்களினதும் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் வழங்குகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
26 minute ago
34 minute ago
41 minute ago