2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

JAT Holdings வழங்கும் அறிவிப்பு

S.Sekar   / 2021 ஜூலை 04 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

JAT Holdings, 2021 ஜூலை 20 ஆம் திகதி ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அண்மையில் அறிவித்துள்ளது. ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கைக்கு முன்பதாக, இது சம்பந்தமான ஒரு தகவல் பரிமாறல் அமர்வில் பொதுமக்கள் கலந்து கொள்ள வசதியாக, 2021 ஜுலை 8 ஆம் திகதியன்று ஏற்பாடு செய்துள்ள ஒரு மெய்நிகர் அமர்வில் கலந்துகொள்ளுமாறும் JAT Holdings அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷில் மரப் பூச்சுகளில் துறையில் முன்னிலை வகிக்கும் ஒரு நிறுவனமாக தனது சந்தை ஸ்தானத்தை வெற்றிகரகமாக நிலைநிறுத்தியுள்ள JAT Holdings, Sayerlack இனைப் பொறுத்த வரையில் உலகின் மிகப் பாரிய விநியோகத்தராகவும் பெயர்பெற்றுள்ளது. அலங்கார தீந்தைகள், இரசாயனங்கள், தூரிகைகள் மற்றும் பிற உட்புற அலங்காரத் தீர்வுகள் போன்ற தயாரிப்புகளின் நீண்ட வரிசையை JAT வழங்குகிறது.

நிறுவனத்தின் ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கை மூலம் திரட்டப்படும் நிதி, தற்போதுள்ள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வசதியை அனைத்து பூச்சுகளுக்குமுரிய முழுமையான, அதிநவீன வசதிகள் கொண்டதாக மேம்படுத்தல், பங்களாதேஷில் ஒரு உற்பத்தி ஆலையை அமைத்தல், White by JAT சந்தைப்படுத்தல் மற்றும் அபிவிருத்தி முயற்சிகளை விரிவாக்கம் செய்தல் மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் உற்பத்தி ஆலை ஒன்றை அமைத்தல் ஆகிய நிறுவனத்தின் உடனடி நோக்கங்களுக்கு நிறுவனம் பயன்படுத்தும். உலகளாவில் மாற்றம் கண்டு வருகின்ற போக்குகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப, நவீன உலகத்திற்கு ஏற்றவாறு மின்-வர்த்தகத் தளங்களையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சிகள் இலங்கையை உலகளாவிய மட்டத்திற்கு உயர்த்துவதற்கான JAT இன் உறுதிப்பாட்டை மேலும் நிரூபிக்கின்றன.

கெப்பிட்டல் அலையன்ஸ் லிமிட்டெட் மற்றும் NDB முதலீட்டு வங்கி ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகின்ற JAT Holdings இன் ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கை பொதுமக்களுக்கு 82,904,846 சாதாரண பங்குகளை வழங்குவதன் ஊடாக (ordinary voting share) ரூபா 2.2 பில்லியன் தொகையை திரட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது. ஆரம்ப பொதுப் பங்கு வழங்கலின் போது பங்கொன்று ரூபா 27.00 என்ற விலைப்பெறுமதியில் விநியோகிக்கப்படவுள்ளதுடன், இதனை வாங்கும் முதலீட்டாளர்களுக்கு உடனடியாகவே 21% பெறுமதி அதிகரிப்புடன் பங்கொன்றுக்கான பெறுமதி ரூபா 32.70 ஆக மாறுமெனவும் கணிப்பிடப்பட்டுள்ளது. தள்ளுபடி செய்யப்பட்ட பணப்புழக்கம் (discounted cash flow - DCF) மற்றும் முன்னோக்கிய வருவாய் விகிதம் (forward-earnings ratio - PER) மதிப்பீட்டு முறைகளின் இணைப்பு மூலமாக இது கணிக்கப்பட்டுள்ளது.  

இந்த வணிக நடவடிக்கை குறித்து JAT Holdings இன் முகாமைத்துவப் பணிப்பாளரான ஈலியன் குணவர்த்தன அவர்கள் கருத்து வெளியிடுகையில், “JAT வெகு விரைவில் ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதை அறிவிப்பதில் நாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதுடன், இந்த அரிய வாய்ப்பை எவரும் தவறவிட்டுவிடக்கூடாது. தளபாடம் மற்றும் முடிவு வேலைப்பாடுகள் துறையில் புத்தாக்கத்தில் முன்னோடியாக நிறுவனம் தன்னை சிறப்பாக நிலைநிறுத்தியுள்ளது. இருப்பினும், நிறுவனத்தின் உண்மையான ஆற்றலை வெளிக்கொணர மேலும் முதலீடுகள் தேவைப்படுகின்றன. இதன் மூலமாக எங்கள் பங்குதாரர்கள் அனைவரும் நிறுவனத்தின் வளர்ச்சியுடன் இணைந்ததாக ஏராளமான நன்மைகளை அறுவடை செய்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது அனைவருக்கும் உற்சாகமூட்டும் ஒரு செய்தியாகும்,” என்று குறிப்பிட்டார்.

ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் செயல்முறையின் தங்குதடையற்ற தகவல் தொடர்பாடலை உறுதிப்படுத்த ஒருங்கிணைந்த அரட்டை (chat) செயல்பாட்டு வசதியையும் இந்த தளம் கொண்டுள்ளது. இது தவிர, ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கைக்கென பிரத்தியேகமான ஒரு துரித சேவை அழைப்பு இலக்கம் மற்றும் அழைப்பை மேற்கொண்டு துண்டிப்பதன் மூலமாக தெரியப்படுத்தும் (missed call line) அழைப்பு வசதியையும் JAT Holdings கொண்டுள்ளது. குறிப்பாக ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கையின் போது முதலீட்டாளர்கள் மிகவும் முழுமையான தகவல் விபரங்களைப் பெற்று, தங்கள் விரல்நுனிகளில் சிறப்பான தீர்மானங்களை முன்னெடுக்க முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .