2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

Mandarina ஹோட்டலுக்கு முன்னணி வணிக ஹோட்டல் விருது

S.Sekar   / 2022 நவம்பர் 21 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆறாவது தடவையாக நடைபெற்ற தெற்காசிய பிரயாண விருதுகள் 2022 (South Asian Travel Awards 2022 - SATA) நிகழ்வில், 'முன்னணி வணிக ஹோட்டல்” விருதை கொழும்பு Mandarina ஹோட்டல் சுவீகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. கோலாகலமாக இடம்பெற்ற இவ்விருது வழங்கல் நிகழ்வு மாலைதீவில் உள்ள Adaaran Select Hudhuranfushi இல் விமரிசையாக நடைபெற்றது.

மெக்சன்ஸ் ஹோல்டிங்ஸ் விருந்தோம்பல் துறை பணிப்பாளரான சாரா மிஸ்வர், குழும நிதிக் கட்டுப்பாட்டாளரான ஷமீலா மிஸ்வர், மெக்சன்ஸ் புரொப்பட்டீஸ் இன் பணிப்பாளரும்ஃபிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரங்க குணவர்த்தன, கொழும்பு Mandarina ஹோட்டலின் பொது முகாமையாளரான தினேஷ் ஹெட்டியாராச்சி, கொழும்பு Mandarina ஹோட்டலின் தலைமை விற்பனை அதிகாரியான ரமேஷ் விதானாராச்சி ஆகியோர் கொழும்பு Mandarina ஹோட்டலின் சார்பில் இந்நிகழ்வில் கலந்துகொண்டு விருதை ஏற்றுக்கொண்டனர்.

தெற்காசிய பிரயாண விருதுகள் (SATA), தெற்காசியாவின் சிறந்த விருந்தோம்பல் மற்றும் பிரயாணத் துறையை அங்கீகரிக்கிறது. மதிப்புமிக்க வருடாந்த நிகழ்வு தலைசிறந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை பல விருதுப் பிரிவுகளின் கீழ் கௌரவிக்கிறது. SATA ஆனது, விருந்தினர் தெரிவு (Visitors Choice) விருதுகள் மற்றும் சிறப்பு அங்கீகார (Special Recognition) விருதுகள் தவிர, போட்டியிடும் ஹோட்டல்கள் மற்றும் வர்த்தக நாமங்களுக்காக 52 க்கும் மேற்பட்ட பிரிவுகளுடன் கீழ் விருதுக்கான விண்ணப்பங்களுக்கு வாய்ப்பளிக்கிறது.

மொத்தம் ஆறு தெற்காசிய நாடுகள் SATA 2022 விருதுகள் நிகழ்வில் போட்டியிட்டன, 500 க்கும் மேற்பட்ட இடங்கள் இவ்விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன. மாலைதீவு மற்றும் சார்க் பிராந்தியத்தில் உள்ள 15 க்கும் மேற்பட்ட அமைப்புகளால் இந்த விருதுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

'தெற்காசியப் பயண விருதுகள் 2022, பல ஆண்டுகளாக, தெற்காசியப் பிராந்தியத்தில் விருந்தோம்பல் துறையில் தலைசிறந்தவர்களை அங்கீகரித்து வருகிறது. இந்த நிகழ்வில் மீண்டும் மீண்டும், தொழில்துறை தலைவர்கள் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளனர். மேலும் இது போன்ற ஒரு மதிப்பிற்குரிய நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படுவது உண்மையில் பெரும் பாக்கியம் மற்றும் கௌரவமாகும்,' என மெக்சன்ஸ் ஹோல்டிங்ஸ் இல் விருந்தோம்பல் துறைக்கான பணிப்பாளரான சாரா மிஸ்வர், கொழும்பு Mandarina ஹோட்டலின் இவ்வெற்றி குறித்து கருத்து தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .