2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

NDB வியாபாரநாமத் தூதுவர் திமுத் கருணாரத்ன வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்

J.A. George   / 2021 ஒக்டோபர் 08 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த நிச்சயமற்ற காலங்களில் NDB வங்கியின் வாடிக்கையாளர்களின் வாழ்வில் சிறிது உற்சாகத்தைக் கொண்டுவரும் முயற்சியில் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட அணியின் தலைவரும் வங்கியின் வியாபாரநாமத் தூதுவருமாகிய திமுத் கருணாரத்ன வாடிக்கையாளர்களுக்கு காணொளி மூலம் உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்  வாடிக்கையாளர் சரிபார்ப்பு செயல்முறையை நடத்துவதில் தனிப்பட்ட முறையில் NDB உடன் இணைந்து கொண்டார்.

அதன்படி, இணையவழியில் நடத்தப்பட்ட  நேர்காணலில்; கருணாரத்ன எதிர்பாராதவிதமாகத் தோன்றி ஆச்சரியமளித்தார். அதில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளின் பாதுகாப்பிலிருந்து ஒரு கணக்கை ஆரம்பிப்பதற்கு முன் அவர்களது அடையாளத்தைச் சரிபார்க்க பல கேள்விகள் வாடிக்கையாளர்களிடம் கேட்கப்பட்டன.

“இந்தக் கடினமான காலங்களில் NDB வங்கி இந்த அற்புதமான தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளது. அங்கு உத்தேச வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளின் பாதுகாப்பிலிருந்து ஒரு கணக்கை ஆரம்பிக்க முடியும்” என்று கருணாரத்ன கூறினார். “கணக்கை ஆரம்பிப்பதற்குத் தமது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முறையானதும் பாதுகாப்பானதுமான வழியை வழங்குவதில் வங்கியுடன் இணைந்து கொள்வதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்” என்று கருணாரத்ன மேலும் குறிப்பிட்டார்.

NDB தனது வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை மறுவரையறை செய்வதற்காக மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தையும் புத்தாக்கத்தையும் இணைக்கிறது. மற்றவர்களுடன் குறைந்தபட்சத் தொடர்பு ஊக்குவிக்கப்படும் இந்த நேரத்தில், NEOS செயலி மூலம் NEOS Pay, QR பணம் செலுத்தும் முறை ஆகிய அம்சங்களை NDB அறிமுகப்படுத்தியுள்ளது.  இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வணிகர்களுக்கு பணம் செலுத்தலாம், மற்ற கட்டணப் பட்டியல்களைச் செலுத்தலாம், அதே நேரத்தில் வங்கி பரிமாற்றங்களை ஒரே அரங்கில் அணுகலாம். NDB NEOS ஆனது இலங்கையில் வங்கி மற்றும் வணிக பரிவர்த்தனைகளை ஒரே ஒரு செயலியில் மேற்கொள்வதனை இயலச் செய்த முதலாவது செயலியாகும்.

மேலும் சௌகரியத்தைச் சேர்த்து, ஏனைய வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்கள் ஏனைய வங்கிக் கணக்கு விவரங்களைப் பயன்படுத்தி NDB NEOS இல் பதிவு செய்யும் இயலுமையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த திறனானது, ஜஸ்ட்பே (JustPay) வலையமைப்பு மூலம் எளிதாக்கப்படுவதுடன் ஏனைய வங்கி வாடிக்கையாளர்களுக்கு NEOS செயலி மூலம் QR குறியீட்டு வசதியைப் பயன்படுத்தி வணிக மற்றும் கட்டணப் பட்டியல்களைச் செலுத்துவதற்கு உதவுகின்றது.

வங்கி அதன் டிஜிட்டல் பரிணாம வளர்ச்சியில் செய்துள்ள பல முதற்; சாதனைகளைகளுக்கு மெருகூட்டுவதாக> செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காணொளி  கே.வை.சீ  (vKYC) சரிபார்ப்பு அடிப்படையில் வாடிக்கையாளர்கள் கிளையொன்றிற்கு விஜயம் செய்யாமல் NDB கணக்குகளை ஆரம்பிக்க உதவுகிறது. கொவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் வாடிக்கையாளர்கள் இப்போது தங்கள் வங்கி நடவடிக்கைகளை தடையில்லாமல் பாதுகாப்பாக மேற்கொள்ளலாம்;. வங்கி மற்றும் ஆட்பதிவுத் திணைக்களத்திற்கிடையிலான கூட்டாண்மை காரணமாக இந்த செயல்முறை மேலும் செயல்படுத்தப்படுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவில்லாத அனுபவத்தை அளிப்பதுடன் தேசிய அடையாள அட்டைத் (NIC) தகவல்களை சீராக சரிபார்க்க உதவுகின்றது.

இந்த செயல்பாடு பல வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியமிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் தங்களுக்கு விருப்பமான கிரிக்கெட் நட்சத்திரங்களில் ஒருவரை அவர்களின் சரிபார்ப்பு மற்றும் கணக்கு ஆரம்பிக்கும் செயல்முறை அழைப்பில் காண்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. இந்த நெருக்கடியான நேரத்தில் இதுபோன்ற சேவையை அறிமுகப்படுத்தியமைக்கு பெரும்பாலானவர்கள் வங்கிக்கு நன்றி செலுத்துவதற்குக் கடமைப்பட்டுள்ளனர். செயல்பாட்டின் காணொளியை  NDB இன் முகநூல் பக்கம் (https://www.facebook.com/ndbbankplc/videos/5106204729406446) அல்லது யூடியூப் (Youtube) சேனல் (https://www.youtube.com/watch?v=OGaKuUObyZw) ஆகியவற்றில் காணலாம்.

NDB ஆனது, போட்டிக்கு மத்தியிலும் டிஜிட்டல் வங்கியியலில் தொடர்ந்தும் முன்னணியில் உள்ளதுடன் வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் தொடர்ந்தும் புதிய முறைகளை அறிமுகப்படுத்தி வருகின்றது.

அதன்படி, ஐக்கிய அமெரிக்காவின் கௌரவமிக்க குளோபல் பைனான்ஸ் சஞ்சிகையினால் (Global Finance Magazine)  2021 ஆம் ஆண்டிற்குரிய இலங்கையின் மிகச் சிறந்த வங்கியாக மகுடஞ் சூட்டப்பட்டுள்ளதுடன், அதற்கு மேலாக, இலங்கைக்குரிய ஆசியாமணி மிகச் சிறந்த வங்கி விருதுகளில் “2021 ஆம் ஆண்டிற்கான மிகச் சிறந்த டிஜிடெல் வங்கி” விருதினையும் பெற்றது.

அத்துடன் ஐக்கிய இராச்சியத்தின் த பேங்கர் சஞ்சிகையினால் “ஆண்டிற்குரிய மிகச் சிறந்த வங்கியாகவும்”; அங்கீகரிக்கப்பட்டது. இது இலங்கையில் பட்டியலிடப்பட்ட 4 வது பெரிய வங்கியாகவும் NDB குழுமத்தின் தாய்க் கம்பனியாகவும் உள்ளது.

இலங்கையில் உள்ள ஒரே நிதிச் சேவைக் கூட்டு நிறுவனமாகிய NDB குழுமமானது, இலங்கை மூலதனச் சந்தையின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக, அதன் அனைத்து குழு நிறுவனங்களின் தயாரிப்பு மற்றும் சேவை வழங்கல்களுக்கு அதன் வாடிக்கையாளர்களுக்குத் தடையற்ற அணுகலை வழங்குவதற்காகத் தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X