S.Sekar / 2023 ஜனவரி 02 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டிகைக் காலத்தில் ஏனையவர்களுக்கு பரிசுகளை வழங்கும் பாரம்பரியத்தை தொடரும் வகையில் SLT-MOBITEL, “நிகரற்ற இணைப்பின் நத்தார்” எனும் தொனிப்பொருளில் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. தேசிய மட்டத்தில் சமூக வலுவூட்டல் திட்டமாக இது அமைந்திருந்ததுடன், சகல சமூகத்தாரையும் பண்டிகையை கொண்டாடுவதற்கு ஆதரவளிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
SLT-MOBITEL இன் சூழல்சார் சமூக ஆளுகை (ESG) திட்டத்தின் அங்கமாக “நிகரற்ற இணைப்பின் நத்தார்” கொண்டாடப்பட்டது. சமூக மேம்பாட்டுக்கும் வலுவூட்டலுக்கும் உதவும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தினூடாக, இலங்கையின் சகல பாகங்களையும் சேர்ந்த சிறுவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் இதர அன்பளிப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன், புதிய கல்வியாண்டுக்கு தம்மை தயார்ப்படுத்திக் கொள்ள உதவியாக அமைந்திருந்தது.
தேசிய தகவல் தொடர்பாடல் தீர்வுகள் வழங்குநர் எனும் வகையில், தொழில்நுட்ப மேம்படுத்தல்களினூடாக சமூகங்களை மேம்படுத்துவதில் SLT-MOBITEL தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அர்த்தமுள்ள சமூகப் பொறுப்புச் செயற்பாடுகளை முன்னெடுத்து, இலங்கையை அடுத்த கட்ட டிஜிட்டல் முன்னேற்றத்துக்கு கொண்டு செல்ல எதிர்பார்த்துள்ளது.
2 hours ago
3 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago
9 hours ago