2023 ஏப்ரல் 01, சனிக்கிழமை

SLT-MOBITEL இன் “துணிவுடன் கனவுகளை நனவாக்குங்கள்”

S.Sekar   / 2023 ஜனவரி 30 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, 2023 ஆம் ஆண்டை வரவேற்று, அனைத்து இலங்கையர்களுக்கு எதிர்காலத்தை நோக்கி பயணிப்பதற்கு வலுவூட்டும் வகையில், “துணிவுடன் கனவுகளை நனவாக்குங்கள்” (‘Be Brave Dream Big') எனும் தொனிப் பொருளை அறிமுகம் செய்துள்ளது. கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா ரெலிகொம் தலைமையகத்தில் இந்த அறிமுக நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

நிகழ்வை ஆரம்பிக்கும் வகையில் குழும தவிசாளரினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன், ஒவ்வொரு நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளால் அந்நிறுவனங்களின் கொடிகள் ஏற்பட்டனர். தேசிய கீதம் இசைத்ததைத் தொடர்ந்து, நிறுவனத்துக்கும் ஊழியர்களுக்கும் ஆசி வேண்டி சமய வழிபாடுகள் இடம்பெற்றன. நிகழ்வின் போது சிரேஷ்ட முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்களால் ஊக்குவிப்பு புத்தாண்டு உரைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

தினசரி தங்கியிருக்கும் திறனிலிருந்து, தூர நோக்குடைய மாற்றங்களுக்காக வாடிக்கையாளர்களை உயர்ந்த மட்டத்துக்கு கொண்டு செல்வதற்கு பங்களிப்பு வழங்க SLT-MOBITEL எதிர்பார்க்கின்றது. புதிய தொனிப்பொருளினூடாக, நிறுவனத்தின் பிரத்தியேகமான உறுதிமொழி மற்றும் 22 மில்லியன் கனவு காண்போருக்கான பரம்பல் போன்றன உள்வாங்கப்பட்டுள்ளதுடன், தமது சொந்த வெற்றியை நோக்கி பயணிப்பதற்கு அவர்களை தயார்ப்படுத்துவதில் பங்களிப்பு வழங்குவதாகவும் அமைந்துள்ளது. புரட்சிகரமான தொழில்நுட்பம் மற்றும் சாதனங்களுடன், SLT-MOBITEL புத்தாக்கமானதாகவும், பின்பற்றக்கூடியதாகவும், புதிய உலகை வாடிக்கையாளர்கள் எய்துவதற்கு ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது.

வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பின்பற்றுவதற்கு உதவிகளை வழங்கி, புதிய போக்குகளுக்கமைய அவர்களை செயலாற்றி, சுபீட்சமடையச் செய்வதற்காக, புதிய தீர்வுகள் இந்நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. அதிவேக, தங்கியிருக்கக்கூடிய இணைப்புத்திறன் போன்றன முன்னரை விட அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்துள்ளதை புரிந்து கொண்டு, SLT-MOBITEL இனால் 200 Mbps வரை மேம்படுத்தப்பட்ட புரோட்பான்ட் வேகங்கள் பாவனையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. புதிய மெய்நிகர் உலகில் இயங்க உதவவும், அடுத்த அலை டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தும் வகையிலும், SLT-MOBITEL இனால் ‘Traverse’ ஊடாக இலங்கையின் முதலாவது immersive metaverse அனுபவம் வழங்கப்படுகின்றது. வாடிக்கையாளர்களால் மெய்நிகரான கட்டமைப்பில் கவர்ந்திழுக்கும் பகுதிகள், சலுகை வழங்கல்கள் மற்றும் பெருமளவான வாய்ப்புகளை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .