2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

Saegis கம்பஸ் Pearson உடனான பங்காண்மையை விஸ்தரிப்பு

S.Sekar   / 2021 ஜூலை 08 , பி.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுகேகொட பகுதியில் அமைந்துள்ள உயர் கல்விச் சேவைகளை வழங்கும் கல்வியகங்களில் ஒன்றான Saegis கம்பஸ், சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட BTEC HNDs in Business, Computing மற்றும் Engineering கற்கைத் தெரிவுகளை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் Pearson உடனான தமது பங்காண்மையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

தொழில் வழங்குநர்களால் இந்த கற்கைகள் அதிகளவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், கற்கையை தொடரும் காலப்பகுதியில் மாணவர்களுக்கு பிரயோக அனுபவங்களை பெற்றுக் கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது. சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிபுணத்துவ தகைமையாக இது அமைந்திருப்பதுடன், பட்டப்படிப்பைத் தொடரும் மாணவரின் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு கற்கைக் காலப்பகுதிக்கு நிகரானதாக அமைந்திருப்பதுடன், அவர்கள் தெரிவு செய்த பட்டப்படிப்பின் இறுதியாண்டுக்கு நேரடி அனுமதியை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

Saegis கம்பஸ் உபவேந்தர் பேராசிரியர். நாலக ஜயகொடி கருத்துத் தெரிவிக்கையில், “Pearson உடன் கைகோர்த்து பெருமைக்குரிய BTEC HNDs களை வழங்க முடிந்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். மாணவர்களுக்கு அவர்கள் தெரிவு செய்த துறையில் முன்னேறுவதற்கு அவசியமான அறிவையும் திறன்களையும் வழங்குவதுடன், அவர்களின் ஆளுமை, புலமை மற்றும் தேர்ச்சிகளுக்கு நேர்த்தியான வகையில் பங்களிப்பு வழங்கும் வகையிலும் இந்த கற்கைகள் அமைந்திருப்பதாக நாம் நம்புகின்றோம். எதிர்காலத்திலும் எமது பங்காண்மைகள் மற்றும் கைகோர்ப்புகளை விரிவாக்கம் செய்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

நிர்வாகம், கணக்கீடு மற்றும் நிதியியல், மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற பிரிவுகளில் HND in Business அல்லது Software Engineering, Network Engineering மற்றும் Data Analytics போன்ற பிரிவுகளில் HND in Computing ஐ மாணவர்கள் தெரிவு செய்ய முடியும். Saegis கம்பஸினால் எதிர்காலத்தில் HND in Quantity Surveying கற்கையை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Saegis கம்பஸைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் விரிவுரையாளர்கள் கல்வித் துறையில் காணப்படும் புகழ்பெற்ற அடையாளங்களாக அமைந்திருப்பதுடன், தமது துறைகளில் ஒப்பற்ற அனுபவத்தையும் கீர்த்தி நாமத்தையும் கொண்டுள்ளனர்.

Saegis கம்பஸ் கல்வி விவகாரங்களுக்கான பணிப்பாளர் பேராசிரியர் தர்மரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “மாணவர்களை கல்வியிலும் நிபுணத்துவம் வாய்ந்த பிரிவிலும் உயர்ந்த நிலைக்கு செல்வதற்கு வழிகோலும் மற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக இது அமைந்துள்ளது. இலங்கையில் சிறந்த தரமான உயர் கல்வியை வழங்குவதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், எமது வழிமுறையில் இந்த நம்பிக்கை ஆழமாக இணைந்துள்ளது.” என்றார்.

Saegis கம்பஸினால் வணிகத் துறையில் பிரித்தானியாவின், கன்டர்பரி கிறைஸ்ட் சேர்ச் பல்கலைக்கழகத்தின் பரந்தளவு பட்டப்படிப்புகள் வழங்கப்படுவதுடன், அதன் சொந்தக் கற்கைகளுக்கு இலங்கையின் உயர் கல்வி அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளது. Pearson இனால் உறுதியளிக்கப்பட்ட சான்றிதழ் மற்றும் டிப்ளோமா கற்கைகளும் வழங்கப்படுவதுடன், அவுஸ்திரேலியாவின் Deakin பல்கலைக்கழகத்தின் உயர் கல்விக் கற்கைளுக்கான வழிகாட்டல்களும் வழங்கப்படுகின்றன.

கம்பஸில் காணப்படும் நவீன வசதிகளில், நவீன தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம், மொழி ஆய்வுகூடம், நூலகம், ஓய்வு பகுதி, நவீன வசதிகளைக் கொண்ட இடவசதி நிறைந்த குளிரூட்டப்பட்ட விரிவுரை அறைகள், விளையாட்டு மற்றும் பொழுது போக்கு பகுதிகள், அதிகளவு இடவசதி கொண்ட உணவகப் பகுதி போன்ற பல அம்சங்கள் அடங்கியுள்ளன.  மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் மற்றும் தொழில் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதற்கான தொழில்நிலை வழிகாட்டல் அலகையும் கொண்டுள்ளதுடன், லியோ கழகம் மற்றும் ரொட்ராக்ட் கழகம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .