2022 ஜூலை 07, வியாழக்கிழமை

Softlogic இன் MAXMO குளிரூட்டிகள் இலங்கையில் அறிமுகம்

S.Sekar   / 2022 மே 13 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

Softlogic Retail (Pvt) Ltd தனது MAXMO வர்த்தக நாமத்தின் கீழ், முற்றிலும் புதிய வகைப்பட்ட பார்ப்பதற்கு கவருகின்ற மற்றும் எரிசக்தி திறன் கொண்ட குளிரூட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. குழுமத்தின் இணைய வழி சில்லறை விற்பனை நிலையமான mysoftlogic.lk வழியாக இணைய வழி உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து Softlogic மற்றும் Softlogic Max காட்சியறைகளிலும் தற்போது கிடைக்கப்பெறுகின்றது.

Softlogic Retail (Pvt) Ltd இன் தலைமை நிர்வாக அதிகாரியான மொஹமட் ரிஸ்வி கருத்து வெளியிடுகையில்: “MAXMO வர்த்தகநாமத்தின் நிலையான வளர்ச்சி, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் சாதனங்களுக்கு அபிமானம் பெற்ற தெரிவாக மாறியதற்கு, Softlogic மீதான வாடிக்கையாளரின் நம்பிக்கையை நேரடிக் காரணமாகக் கூறலாம். இலத்திரனியல் வர்த்தகத் துறையில் எங்களின் பரந்த அளவிலான வணிக தொழிற்பாடுகளுடன், வலுவான மற்றும் விசுவாசமான வாடிக்கையாளர் தளத்தை நாங்கள் கட்டியெழுப்பியுள்ளோம். MAXMO என்பது அத்தகைய ஒரு வர்த்தகநாமமாகும். இதன் மீது மகத்தான ஈர்ப்பை நாம் கண்டோம். நாங்கள் தற்போது MAXMO வர்த்தகநாமத்தின் கீழ் சலவை இயந்திரங்கள் முதல் சிறிய அளவிலான சாதனங்கள் வரை பல வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனையை மேற்கொண்டு வருகிறோம். இன்று MAXMO குளிரூட்டிகளை MAXMO குடும்பத்தில் புதிய வரவாக அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

MAXMO இரண்டு வகையான குளிரூட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. Inverter வகை குளிரூட்டிகள் (3 BTU திறன் தெரிவுகளுடன் - 12000/18000/24000) மற்றும் Inverter அல்லாத வகை குளிரூட்டிகள் (4 BTU திறன் தெரிவுகளுடன் – 9000/12000/18000/24000). 12000 BTU தெரிவு ஒரு சிறிய வரவேற்பறை, வகுப்பறை அல்லது சாப்பாட்டு அறைக்கு (500-600 சதுர அடி) உகந்தது. 24000 BTU தெரிவு ஒரு பெரிய இடத்துக்கு மிகவும் பொருத்தமானது (கிட்டத்தட்ட 1,000-1,200 சதுர அடி). மேலும், MAXMO அதன் ‘Flexible Inverter’ தொழில்நுட்பத்தின் காரணமாக, 10 ஆண்டு உத்தரவாதத்துடன், ஒட்டுமொத்தமாக மின்சார நுகர்வைக் குறைப்பதற்கு இடமளித்து, கூடுதல் எரிசக்தி சேமிப்பு மற்றும் பயன்பாட்டின் செயல்திறனை வழங்குகிறது.

Flexible Inverter தொழில்நுட்பமானது, அறையில் உள்ளவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் குளிர்விப்பதன் மூலம் ஆற்றலைச் சேமிக்கிறது, நிகழ்நேரத்தை தானாகவே சரிசெய்கிறது. இது copper condenser, அரிப்பை நீக்கும் Bluefin தொழில்நுட்பம் மற்றும் R32 சுற்றுச்சூழல் நட்புடனான குளிர் பதனூட்டி போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. இச் சேவையானது இலவச தள ஆய்வு மற்றும் நிறுவல், 3 தடவை வரையான இலவச பராமரிப்பு சேவைகள் மற்றும் 1 ஆண்டு முழுமையான மற்றும் 10 வருட compressor உத்தரவாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முடிவில், அவர் கூறுகையில்: “Softlogic இன் உறுதிமொழியை உண்மையாக நிலைநாட்டும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு விலைப் பெறுமதிகளில் மிக உயர்ந்த தரமான சேவையின் பக்கபலத்துடன், MAXMO குளிரூட்டி வர்த்தகநாமம், Panasonic, Samsung மற்றும் TCL அடங்கலாக Softlogic இல் தற்போதுள்ள குளிரூட்டிகளின் வரிசையில் வரவேற்கத்தக்க ஒரு அறிமுகமாக மாறியுள்ளது. Softlogic இல், MAXMO குளிரூட்டிகள் பாரம்பரியமாக மின்விசிறிகளை உபயோகிக்கும் வாடிக்கையாளர்களை ரூ. 1682 என்ற கவர்ச்சிகரமான மாதாந்த தொடக்க வழலையில் குளிரூட்டி ஒன்றை சொந்தமாக்கிக் கொள்ள வாய்ப்பளித்து அவர்களை கூடுதலான அளவில் ஈர்க்க உதவும் என்று நம்புகிறோம்,” என்று குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .